பக்கம்:தாயுமானவர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令

110 & தாயுமானவர் நிலை நனவில் துயிலாகும். துக்கத்தில் ஆழ்ந்து பெருமூச்செ றியும் நிலை நனவில் மிகு துயிலாகும். மூர்ச்சித்துக் கிடக்கும் நிலை நனவில் உயிர்ப் படங்கல் (துரியாதீதம்) என்னும் அதீத நிலையாகும். இங்ங்னம் முறையே உயிர் நெற்றி, கண்டம், இதயம், உந்தி, மூலாதாரம் என்ற ஐந்து இடங்களில் இறங்கி வருதலால் இவை கீழாலவத்தை என்ற பெயர் பெறுகின்றது. இங்ங்னம் முறையே இறங்கிய உயிர் பிறகு அம்முறையிலேயே ஏறிவ ருதல் மேலாலவத்தை எனப்படும். இந்நிலையில் இறுதியாகப் புருவ நடுவை அடைந்த உயிர் அவ்விடத்திலேயே ஐந்து நிலைகளை யடையும். இவையே மத்தியாவஸ்தை என்று வழங்கப் பெறும். இது சகலாவத்தையின் காசியமாகும். மத்தியாவத்தையின் ஐந்து நிலைகளிலும் உயிர் இயங் கும் முறைகளையும் அறிந்து கொள்ளல் வேண்டும். இந்த ஐந்து நிலைகள் சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத்தில் சொப்ப னம், சாக்கிரத்தில் சுழுத்தி, சாக்கிரத்தில் துரியம், சாக்கிரத்தில் துரியாதீதம் என்பன. சாக்கிரத்தில் துரியாதீதம் என்பது, ஒருவன் ஒரு பொருளை ஒரிடத்தில் வைத்து அதனை அறியா மல் திகைத்து நிற்கும் நிலை: சிறிது பிரான வாயு இறங்கியது சாக்கிரத்தில் துரியம்; அந்தப் பொருள் வைத்த இடத்தை விசாரிக்க வந்த நிலை சாக்கிரத்தில் சுழுத்தி; அந்தப் பொருள் வைத்தவிடம் நினைவெழத் தோன்றுவது சாக்கிரத்தில் சொப் பனம்; அப்பொருள் புலப்பட அறியவந்தவிடம் சாக்கிரத்தில் சாக்கிரம். ஆக மத்தியாவத்தை ஐந்து. சுத்தாவத்தையின் காரியம் நின்மலாவத்தை எனப்படும். இஃது அமலசாக்கிரம், அமல சொப்பனம், அமல சுழுத்தி, அமல துரியம், அமல துரியாதீதம் என்று ஐந்தாக விளங்கு வது. இவற்றின் இலக்கணம்: அமல சாக்கிரம் என்பது, ஆசாரி யனிடம் ஞான தீட்சை பெற்று முப்பொருள் உண்மையை விசாரித்து அறிந்து, கேட்டு, சிந்தித்து, தெளிந்து காணும் பொருளனைத்தும் சிவவடிவமாகவும், நுகர்வன எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/130&oldid=892121" இலிருந்து மீள்விக்கப்பட்டது