பக்கம்:தாயுமானவர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தத்துவக்குறிப்புகள் 'தா யுமான அடிகளின் பாடல்கள்' என்னும் நூல் சாத்திர நூல் அல்ல. அது தோத்திர நூல். சாத்திர நூலாயின் தத்துவக் கருத்துகள் நன்கு விளக்கம் பெற்றிருக்கும். இது தோத்திர நூலாயினும் தத்துவக் கருத்துகள் குறிப்புகள்போல நூலெங்கும் காணப் பெறுகின்றன. இத்தத்துவக் கருத்துக ளுக்கு விளக்கம் தெரிந்தாலன்றிப் பாடல்களைத் துய்த்தல் இயலாது. இத்தத்துவக் கருத்துகளை எடுத்துக்காட்டி அவற் றிற்கு விளக்கமும் ஈண்டுக் காண்போம். ஒரு பாடலின் (கருணாகரக் கடவுள் - 2) 'மண்ணாதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்காதி சுரோத்ராதியும் வளர்கின்ற சத்தாதி மனமாதி, கலையாதி, மன்னுசுத் தாதியுடனே தொண்ணுற்றோ டாறும்,மற் றுள்ளனவும் மெளனியாய்ச் சொன்ன ஒரு சொற்கொண்டதே: தூவெளிய தாய்அகண் டானந்த சுகவாரி தோற்றும்அதை என்சொல்லுவேன்!” என்பது முதற்பகுதி. இதில் மண் முதலிய ஐம்பூதமும், புறக்கருவிகளும், ஐம்பொறிகளும், தந்மாத்திரைகளும், முக்க ரணங்களும் அசுத்தமாயா தத்துவங்களும் சுத்தத்துவங்களும் ஆகிய தொண்ணுற்றாறு தத்துவங்கள் மாயையில் நின்று வந்தன என்று குறிப்பாக உணர்த்துவர். சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிபாகக் கொள்ளப்படும் பொருள்கள் பதி, பசு, பாசம் என்ற மூன்று. ஈண்டு மேற்கூறிய தத்துவங்கள் பாசத்தைப் பற்றியவை. பாசம் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைக் கொண்டது. இவற் றுள் மாயையினின்றும், தத்துவங்கள் தோன்றும். மாயை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/132&oldid=892123" இலிருந்து மீள்விக்கப்பட்டது