பக்கம்:தாயுமானவர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆,116 哆 தாயுமானவர் தத்துவங்களைக் குறிப்பிடும் போக்கில் ஒரு பாடலில், 'ஐவகை எனும்பூத மாதியை வகுத்ததனுள் அசரசர பேதமான யாவையும் வகுத்துநல் லறிவையும் வகுத்துமறை யாதிநூ லையும்வகுத்து' - சின்மையானந்த குரு - 4 என்று குறிப்பிடுவர். இதனை விளக்குவோம். இறைவன் அனைத்து ஆற்றலையும் பெற்றவன் என்பதற்கு அவனது படைப்பே சிறந்ததோர் எடுத்துக்காட்டாக அமைகின்றது. பிரளயக் காலத்தில் பிரபஞ்சம் எல்லாம் அவனிடத்து ஒடுங் கிக் கிடக்கின்றது; படைப்புக் காலத்தில் அவை யாவும் தோற்றத்திற்கு வருகின்றன. படைப்பின் மகிமையிலிருந்து படைப்போனின் மகிமைகளில் பல நமக்குப் புலனாகின்றன. இறைவன் நமக்கு நல்கியுள்ள அறிவையும் ஆற்றலையும் கொண்டே அவனை ஆராய்கின்றோம். இறைவன் வேறு, அவனுடைய படைப்பு வேறு அல்ல. சுயம்பு என்பது இறைவனுக்கு அமைந்த பெயர். தோன்றாத நிலையிலிருந்து தோன்றுகின்ற நிலைக்குத் தன்னை மாற்றிய மைத்தவன் என்பது அதன் பொருள். முதலில் ஐவகைப் பூதத்தைக் காண்போம். ஆகாயம் முதலில் உண்டான பூதம். வெட்டவெளி (Empty space) என்பதுவே அது. இறைவன் நீக்கமற எங்கும் நிறைபொருள் என்பதை வெட்டவெளி மெய்ப்பிக்கின்றது. வெட்டவெளியை எல்லை கட்டிக்காட்ட முடியாது. அதனிடத்துப் பிளவையும் உண்டு பண்ண முடி யாது. வெட்ட வெளியிலே பூமி போன்ற கோள்கள் மிதந்து கொண்டுள்ளன. இங்ங்னம் மிதந்து கொண்டிருக்கும் கோள் கள் ஒவ்வொன்றிலும் வெட்டவெளி இடையீடின்றி எங்கும் வியாபகமாயுள்ளது. நாம் சுவர் ஒன்று எழுப்பி இப்பக்கம், அப்பக்கம் என்று பேசுவது போல் வெட்டவெளிக்கு இப்பு றம் அப்புறம் என்று பேச முடியாது. சுவரினுடும் சுவருக்கு நாலா புறங்களிலும் எங்கும் வியாபாகமாயிருப்பது வெளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/136&oldid=892127" இலிருந்து மீள்விக்கப்பட்டது