பக்கம்:தாயுமானவர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மனத்தின் பண்புகள் சித்தாந்த சாத்திரத்தில் ஆன்மதத்துவம் இருப்பத்து நான்காகக் கூறப்பெறும். அவை: அந்தக்கரணம் நான்கு: ஞானேந்திரியங்கள் ஐந்து; கன்மேந்திரியங்கள் ஐந்து; தந்மாத் திரைகள் ஐந்து; பூதங்கள் ஐந்து; இவையனைத்திற்கும் மூலகா ணமாக இருப்பது மூலப்பிரகிருதி, இது சாத்துவிகம், இராசதம், தாமதம் என்ற முக்குணங்களையும் உடையது. இந்த முக்கு ணங்களும் துலமாய் வெளிப்படாது சூக்குமமாய் நிற்கும் நிலையே மூலப்பிரகிருதி. இஃது அவ்யக்தம் என்று வழங்கப் படும். வியக்தம் - வெளிப்பாடு; அவ்வியக்தம் - வெளிப்பா டின்மை. இஃது இங்ங்னம் வெளிப்படாது காரண நிலையில் நிற்றலால், பெரும்பாலும் இதனை ஒரு தத்துவமாகக் கூறப் பெறுதல் இல்லை. சித்தம்: அவ்யக்தமாய் நிற்கும் மூலப்பிரகிருதியின் ஒரு பகுதியில், வெளிப்படாது சூக்குமமாய் நிற்கும் முக்குணங் கள் துலமாய் வெளிப்பட்டுத் தம்முள் சமமாய் நிற்கும் நிலை ஒன்றுண்டு. இந்நிலை குணதத்துவம் என்று வழங்கப்படும். இக்குண தத்துவமே ஆன்மா ஒன்றைச் சிந்திப்பதற்குக் கருவி யாய் நிற்கும் 'சித்தம்' எனப்படும் அந்தக்கரணமாகும். அந்தக் கரணம் ஒர் அகக் கருவி. நன்கு தெரிந்த ஒன்றை மீளமீளச் சிந்திப்பதனால் இன்பமும் துன்பமும் உண்டாகின்றன. ஆகவே, ஆன்மாவின் தன் வேதனைக் காட்சிக்கு இச்சித்தமே கருவியாக அமைகின்றது. மனத்தால் ஆராய்வதற்குரிய எப் பொருளிலும் சித்தம் செல்லுதலால் அதன் வியாபகத்தைக் கடலுக்கும், அதன் செயலைக் கடலின் அலைக்கும், சித்தத் தின்வழிச் செல்லும் உயிர் (ஆன்மா) கடல் அலையால் தாக்குதலுறும் துரும்பிற்கும் ஒப்பிட்டு, 1. இவை: சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்பன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/143&oldid=892135" இலிருந்து மீள்விக்கப்பட்டது