பக்கம்:தாயுமானவர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

离 冷 மனத்தின் இயல்புகள் ఈ 125 శ 'புத்தினனும் துத்திப் பொறி.அரவின் வாய்த்தேரை ஒத்துவிட தெந்தையருள் ஒங்கும்நாள் எந்நாளோ?” - எந்நாட். தத்துவமுறைமை 8 {துத்தி - புள்ளிகள்) என்று கூறுவர். காரணத்தில் உள்ளது காரியத்திலும் உளதாகும் என் பதை நாம் அறிவோம். எனவே, குண தத்துவத்தினின்றும் தோன்றிய புத்தி தத்துவத்திலும் முக்குணங்கள் உளவாகும். இதனால் அவற்றின் காரியமாகிய கொள்கைகள் பலவும் இப்புத்தியின் கண்ணே தோன்றும். இவை பாவகம் எனப்ப டும். புத்தியில் தோன்றும் பாவகங்கள் எண்ணிறந்தனவாயி னும் அவற்றை எட்டாகத் தொகுத்துக் கூறுவர் சித்தாந்திகள். இவற்றுள் தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம் என்னும் நான்கும் நல்லவையாகும். இவற்றின் மறுதலையாகிய அதன் மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம் என்னும் நான்கும் தியவையாகும். தன்மம் முதலிய நல்லவை நான்கும் ஒன்றன்பின் ஒன்றாகக் காரண காரிய முறையில் தோன்றி ஐசுவரியம் வந்தவுடன் அதன்மம் முதலிய தீயவை நான்கும் ஒன்றன்பின் ஒன்றாக அவ்வாறு தோன்றி அநைசுவரியம் வந்து நிற்கும். அநைசுவரியம் வந்தவுடன் முன்போலவே 'தன்மம்' என்னும் நல்லது தோன்றும். இங்ங்னம் இப்புத்தி தத்துவம் பலவகைப் பாவகங்கட்குக் காரணமாதலால், உயிர் அப்பாவகங்களின் வழியே நின்று இறைவனை அறியாமல் உலக பாசங்களில் ஒரு சக்கரம் போல் சுழன்று வருந்தும். இதனால்தான் புத்தி தத்துவத்தைப் பல புள்ளிகளையுடைய பாம்பிற்கு உவமிக்கின்றார் அடிகள். புத்தியால் அறிவு உண் டாகும்; அறிவினால் நிலையாதவற்றில் வெறுப்பு உண்டா கும்; அற நெறிச் சென்று செல்வம் பெறும் பொழுது செல்வத் தினால் செருக்கு உண்டாகும்; செருக்கினால் பாவச் செயல் ஏற்படும். பாவச் செயலினால் அறியாமை மிகும்; அறியாமை யால் ஆசை மிகும். அதனால் வறுமையும் துன்பமும் ஏற்ப டும். ஏற்படவே, மீண்டும் அறத்திலும் நல்லறிவிலும் கருத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/145&oldid=892137" இலிருந்து மீள்விக்கப்பட்டது