பக்கம்:தாயுமானவர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 128 ; தாயுமானவர் வேண்டியுள்ளது. அங்ங்ணமே, தொடக்கக் காலத்தில் அகங் காரம் உயிர்களின் முன்னேற்றத்திற்குப் பெருந்துணை புரி கின்றது. அகங்காரம் இல்லாவிடில் சிற்றுயிர்கள் பேருயிர்களாகப் பரிணமிக்க முடியாது. இந்த அகங்காரம் என்பது என்ன? தான் அல்லாததைத் தான் என்று கருதுவது அகங்காரம். பாடலில் இஃது ஆங்காரம் என்று சொல்லப்படுகின்றது. இதனையும் எடுத்துக்காட்டால் தெளிவாக விளக்குவர் இராமகிருஷ்ண தடோவனத்து அடிகள். ஒரு மனிதன் விறகுக் கட்டொன்றை விற்பதற்காகத் தெருவில் எடுத்துச் செல்லுகின்றான். அவனு டைய ஊரும் பேரும் மக்களுக்குத் தெரியாது. விறகு என்று அழைத்தால் அதற்கு அவன் செவி சாய்த்து விடையளிக்க ஆயத்தமாகின்றான். அவன் விறகு அல்ல என்பது நமக்கும் தெரியும்; அவனும் அதை அறிவான். ஆனால், விறகைச் சுமந்து செல்லும் அவன் தன்னை விறகுமயமாக எண்ணிக் கொள்ளுகின்றான். இங்ங்னமே சீவான்மாவும் தான் எடுத்தி ருக்கும் உடலையொட்டி அந்த உடல் மயமாகத் தன்னை உணர்கின்றது. உண்மையில் தான் உடல் அல்ல. தானல்லாத உடலைத் தான் என்று கருதுவதுதான் அகங்காரம். அஃது உடலின் இயல்புகளாகிய நிறம் உயரம் இனம், இடம் முதலியவற்றையெல்லாம் தன்மயமாகக் கருதிக் கொள்வதும் இந்த அகங்காரத்தினாலேயோகும். மனிதனது அந்தக்கரணங் களாகிய மனம், சித்தம், புத்தி முதலியவைகளையும் தன்மய மாக உணர்வது இந்த அகங்காரத்தின் விளைவே. இப்படித் தானல்லாததைத் தான் என்று ஆழ்ந்து பற்றிப் பிடித்திருக்கும் அபிமானத்தை அகற்றுதல் மிகக் கடினமானது. சீவான்மா பரமான்மாவை அடைய வொட்டாது அது பிரித்து வைக்கின் றது. தேங்காயினின்றும் நாரைப் பிரித்தெடுப்பதைப் போன்று இந்தப் பற்றை அகற்றுதல் சிரமமானது. இதனை அகற்றுவதற்கு ஆன்ம சாதகர்கள் அனைவரும் அரும்பாடு பட்டுள்ளனர். இந்தப் பிடிப்பை நியாயப்படுத்துவதற்கு தே காத்மாவாதிகள் என்ற ஒரு கூட்டமே தோன்றி அதனை ஒரு தத்துவமாகக் கொண்டுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/148&oldid=892140" இலிருந்து மீள்விக்கப்பட்டது