பக்கம்:தாயுமானவர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 136 & தாயுமானவர் யும் வரையில் அகங்காரம் பெருந்துணை புரிகின்றது. மனி தன் உடல் சொரூபமல்லன்; அவன் ஆன்ம சொரூபமுடைய வன். இந்த ஆன்ம சொரூபம் பரமான்மாவுக்கு உரியது என்னும் ஞானத்திற்கு சீவன் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் அவன் ஈடுபடுகின்ற பொழுதுதான் தான்' ஆன்ம சொரூபமல்ல; உடல் சொரூபம் தான் என்று நினைக்கின்ற அகங்காரம் முன்னணியில் நின்று கொண்டு அவனுடைய ஆன்மசாதனத்திற்குப் பெருந்தடை செய்கின்றது. எவ்வளவு முயன்றாலும் தேகாத்ம புத்தி அல் லது தன்னைத் தேகம் என்று கருதுகின்ற அகங்காரம் அகலுவ தில்லை. இக்கருத்தை இதனோடு எந்நேரமும் வாங்கா நிலா அடிமை போராட முடியுமோ? என்று அடிகள் வினவுகின்றார். 'வாங்கா நிலா என்பதற்கு விலகியிருக்காமல்' என்பது பொருளாகின்றது. உடல் நான்’ என்கின்ற உணர்விலிருந்து விலகியிருப்பதற்கு மாறாகத் தன்னை உடல்மயமாக எண் னிக் கொண்டு விதவிதமான இன்னல்கட்கு ஓயாது ஆளா வது பொருந்துமா என்பது இதன் கருத்து. அடிகளார் பிறிதோர் இடத்தில், "நானென்னும் ஓர்அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சகமாயை நலியா வாகித் தான்வந்து தொடரும்; இத்தால் வளரும்துன்பச் சாகரத்தின் பெருமைஎவர் சாற்ற வல்லார்’ - ஆகாரபுவனம் - 15 என்று பேசுவர். 'நான்' என்னும் அகந்தை தரும் துன்ப சாகரத்தை எடுத்துக்காட்டுகின்றார். இன்னும், மிகவும் கவ லையுடன் இறைவனை வினவுகின்றார். 'நான், நான்' சொல் லித் திரியும் ஒர் அகந்தையை எனக்குக் கொடுத்துவிட்டு என்னை இந்நிலையில் வைக்க வேண்டுமா? இதனால் என் இரு வினைகளை ஈட்ட வேண்டுமா? இதனால் உடலை ஒரு சுமையாகத் தாங்கிக் கிடந்து உழலுமாறு செய்ய வேண் டுமா? இந்த உடற்பாரத்தினுள் உயிரையும் உள் வைத்து வேடிக்கை பார்க்கின்றாயா?’ என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/156&oldid=892149" இலிருந்து மீள்விக்கப்பட்டது