பக்கம்:தாயுமானவர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

● 3. மனத்தின் இயல்புகள் 141 & தைசதாகங்காரத்தினின்றும் மனம் தோன்றிய பின்னர் ஞானேந்திரியங்களும் (மெய், வாய், கண், செவி, மூக்கு) இவற்றையடுத்து, வைகாரிகாகங்காரத்தின்று கன்மேந்திரியங் களும் (வாக்கு, பாதம், பாணி பாயு, உபத்தம்)" தோன்றும். தாமதாகங்காரத்தினின்றும் சுத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்' என்னும் தந்மாத்திரைகள் தோன்றும். தந்மாத்திரை என்பது, 'அதனளவாய் நிற்றல்' என்று பொருள் படும். அதாவது வேறொன்றோடும் கூடாது, 'தனித்து நிற்றல்' என்பதாகும். பூதங்கள் நேரே துலமாய்த் தோன்றாமல் முதற்கண் தந்மாத் திரை வடிவில் தோன்றிய பின்னரே பூதவடிவில் தோன்றும். பூதங்களின் சூக்குமநிலையே தந்மாத்திரையாதல்பற்றி அவை சூக்கும பூதம் எனவும் வழங்கும். அதனால் பூதங்க ளைத் (நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்பவற்றை) தூலபூதம் என்றும், மகாபூதம் எனவும் வழங்குவர். பூதங்களை அறியும் ஐயறிவு ஐம்புலன்களாகும். ஐயறி வாகிய ஐம்புலன்கள் வழியாக மனம் செல்லுங்கால் அஃது உலகப் பற்றில் ஈடுபடும். மனமே ஆன்மா உலகத்தை ஆராய்வதற்குக் கருவியாக உள்ளது. எல்லா விதமான நினை விற்கும் மனம் இடமாக இருத்தலாலும் உலகில் கண்ட வற்றை மனம் தன்னில் பதிவு செய்து மீண்டும் ஆன்மா அவற்றை நினைப்பதற்குக் காரணமாயிருத்தலாலும், மனத்தி னைத் தாயுமான அடிகள் பெரியதொரு மாயாதத்துவமாகக் கருதுவர். 'வல்லமையே காட்டுகின்ற மாமாயை (பராபரம் - 165) என்றது காண்க. இத்தத்துவத்தின் இயல்புகளைப் பல பாடல்களில் விளக்குவார் அடிகள். மனமும் இந்திரியங்களும்; மனம் ஐம்புலன்களால் கெடு வதை திவ்விய கவி பிளளைப் பெருமாள் அய்யங்கார், 10. இவை தமிழில் முறையே மொழி, கால், கை, எருவாய், கருவாய் என்றும் வழங்கப்பெறும். 11. ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்பது தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/161&oldid=892155" இலிருந்து மீள்விக்கப்பட்டது