பக்கம்:தாயுமானவர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தின் இயல்புகள் & 143 & னும் பொறிக்குரிய ஒசையின்பத்தின் ஆசையால் அழிந்தது. வண்டு மணத்தால் அழியும். வண்டுகள் மலர்களின் நறும ணத்தை அவாவித் தாமரை முதலிய பெருமலர்களில் வந்து தங்கும். அம்மலர்கள் குவிந்து கொள்ளுங்கால் வண்டுகள் மலர்களில் அகப்பட்டுத் தவிக்கும். அன்றியும், சண்பக மலரின் நறுமணத்தையும் அதன் நறுந்தேனையும் நுகரும் விருப்பால் அதனை அணுகி மொய்த்து அம்மலரின் வெப்பம் தாங்க முடியாமல் இறந்துவிடும். மற்றும் நறுமண நசையால் தேனில் மொய்த்து அதனை மிகுதியாக உண்டு மயங்கி மீள மாட்டாது சிக்கி அழிதலும் உண்டு. இது மூக்கு என்னும் பொறிக்குரிய நாற்றவின்பத்தின் ஆசையால் அழிந்தது. விட்டில் ஒளியால் அழியும். இதனையும் விளக்குவோம். விட்டில் பூச்சி விளக்கொளியைக் கண்டவுடன் அதனிடத்து அவாவோடு ஓடிவந்து விழுந்து இறந்து படும். இது கண் என்னும் பொறிக்குரிய ஒளியின் ஆசையால் அழிந்தது. ஆயின் மனிதன் ஐம்புலன்களையும் ஒரு சேர நுகரத் தொடங்கி அழிந்து படுகின்றான். இங்ங்னம் ஐந்து புலன்க ளால் மக்கள் அழிந்துபடுவதைக் கூறுகின்றார் திவ்விய கவி. இந்த உலகம் பலவிதமான பற்றுகளுக்கு இடங்கொடுக் கின்றது. ஒவ்வோர் உயிரும் ஒருவித உடல் பற்றுக்கு இலக் காகின்றது. அதில் சலிப்பு ஏற்பட்டதும் மற்றோர் உடலை எடுக்க அவ்வுயிர் முந்துகின்றது. இங்ங்னம் உலகம் முழுதும் பற்று மயமாக உள்ளது. ஒரு சீவனுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் பற்றுதலுக்குக் காரணமாக இருப்பது 'மனம்' என்பது தெளிவாகின்றது. இதன் காரணமாக உயிர் கள் அனைத்தும் விதவிதமான பற்றுதல் வைத்து வாழ்கின் றன. உயிர் ஒன்று எதனிடம் பற்று வைக்கின்றதோ அஃது அதுவாய் நாளடைவில் மாறி விடுகின்றது. கனக்கற்ற பிறவி களில் உடல்கள் கணக்கற்ற உயிர்களை எடுப்பதற்குப் பற்று ஒன்றே முதற் காரணமாகின்றது. புழுவொன்றின் வாழ்வைக் கவனித்தால் அஃது இடம் மாறிப் போதலில் சிறப்பு அம்சம் ஒன்று உண்டு. சரடு போன்று நீண்ட உடல் படைத்திருக்கும் அது தன் உடலின் ஒரு பகுதியைக் கொண்டு ஒரிடத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/163&oldid=892157" இலிருந்து மீள்விக்கப்பட்டது