பக்கம்:தாயுமானவர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

喙,146 哆 தாயுமானவர் 'அறிவிப்பான் நீஎன்றால் ஐம்புலன்கள் தத்தம் நெறிநிற்பார் யாரே? நிகழ்த்தாய் பராபரமே!” - மேலது 250 என்று கூறுவதையும் காண்க. பின்னும் ஐம்புலக் கொடுமை யைப் பிறிதோரிடத்தில், 'வாயில்ஓர் ஐந்தில் புலன்எனும் வேடர் வந்தெனை ஈர்த்து, வெங் காமத் தீயிலே வெதுப்பி உயிரொடு தின்னச் சிந்தைநைந் துருகி, மெய்ம் மறந்து தாயிலாச் சேய்போல் அலைந்தலைப் பட்டேன்?" - சிவன் செயல் - 5 என்று பகர்கின்றார். மனக்குரங்கு: தமக்குக் கட்டுப்படாமல் இருக்கும் மனத் தைக் குரங்குக்கு ஒப்பிட்டுப் பேசுவது அடிகளாரின் தனிச்சி றப்பு. மனத்தை ஒடுக்காது உலகத்தில் செல்லவிட்டால் அது குரங்குபோல எங்கும் தாவிச் சென்று அறிவுடைப் பொருளா கிய உயிருக்குப் பலவகையாகிய இன்னல்களை விளைத்து அதனைச் சீர் குலைக்கும் என்கின்றார் அடிகள். இதனை, 'மனமான வானரக்கைம் மாலையா காமால் எனையாள் அடிகள்அடி எய்துநாள் எந்நாளோ?” - எந்நாட். தத்துவமுறைமை - 5 என்ற பாடலில் காணலாம். இதில் மனம் என்னும் குரங்கின் கையில் அகப்பட்ட மாலையாகத் தன்னை உவமிக்கின்றார். குரங்கு கையில் அகப்படும் பூமாலையை அது பல்வேறு வகையில் சிதைத்தழிப்பதுபோல் தானும் மனத்தால் துன்பப் படுதலை எடுத்துக் காட்டுகின்றார். இன்னொரு பாடலில் குரங்காக விளையாடுகின்ற அந்த மனத்தைப் பற்றிச் சொல்லுகின்றார். மனமாகிய அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/166&oldid=892160" இலிருந்து மீள்விக்கப்பட்டது