பக்கம்:தாயுமானவர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தின் இயல்புகள் & 147 & குரங்கு சாதாரணக் குரங்கு அன்று; பேய்க் குரங்கு குதிக் கின்ற பேய்க் குரங்கு. அது பொல்லாத இயல்புடையது. குரங்கிலும் பேய்க்குரங்காக இருக்கும் ஒன்று குதிக்கத் தொடங்கிவிட்டால், அதன் ஆட்டத்தைச் சொல்லி முடியாது. ஆனால், இந்த மனம் இருக்கின்றதே! இது மனம் குரங்கைவி டப் பொல்லாதது; அந்தக் குரங்கு குதிக்கின்ற குதிப்பைவிட மிகுதியாகக் குதிக்கும் ஆற்றல் பெற்றது. இதனை விளக்க ஒர் உவமையைத் தேர்ந்தெடுத்தார் அடிகள்; இந்தப் பேய்க் குரங்கை ஒரு தேள் கொட்டிவிட்டால் எவ்வளவு குதிக்கும் அது? இந்தத் தேளும் ஒரு சாதாரணத் தேளன்று; கொள்ளித் தேள்! 'கொள்ளித்தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க்குரங்காய்க் கள்ளமனந் துள்ளுவதென் கண்டாய் பராபரமே!’ - பராயரம் 172 என்ற பாடலில் கள்ள மனம் துள்ளுவதைக் காட்டுகின்றார். 'காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட் டோட அதன்பிறகே ஓடும் தொழிலால் பயன்உளதோ?” - காடும் கரையும் - 1 என்றதில் காட்டிலும் கரையிலும் கால்விட்டு ஓடும் மனக்கு ரங்கைக் காட்டுகின்றார். அடுத்து, "குணமிலா மனமென்னும் பேய்க்குரங்கின் பின்னே மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே!” - கல்லாலின் - 4 என்று பேய்க் குரங்கின்பின்னே கவலையுடன் தன்னைச் சுழன்று ஓடவைத்த நிலைக்கு எண்ணி ஏங்குகின்றார். திருந்தா மனம்: திருந்தா மனத்தின் தன்மையை அடிகள் பலவிடங்களிலும் எடுத்துக் காட்டுகின்றார். ஒரு பாடலில் (எங்கும் நிறைகின்ற பொருள் - 4) கூறுவதைக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/167&oldid=892161" இலிருந்து மீள்விக்கப்பட்டது