பக்கம்:தாயுமானவர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 重48 令 தாயுமானவர் சொன்னபடி இனங்கி வாராத பிள்ளையைத் தாய் தொட்டி மனம் ஏதாவது ஒரு பொருளில் நினைப்பை உண்டாக்கிக் கொண்டேயிருக்கும். ஆணவமலத் தொடர்புடைய' உயிர் மாயையாகிய உலகத்தில் நன்கு அழுந்தாதபொழுது உடம் பாகிய தொட்டிலின் ஊசலாட உலகப் பொருள்களில் உயி ரின் அறிவு அழுந்த நேருமாதலின், அதனைத் தொடையி னைக் கிள்ளுவதற்கு உவமித்துள்ளார். மனம் ஒரு பொரு ளைப் பற்றுவதால்தான், உயிர் அதில் அழுந்துவதாகிய துன்பத்தை அடைகின்றது. மனம் ஒரு பொருளை விட்டு மற்றொரு பொருளைப் பற்றுங்கால் முன்பற்றிய பொருளை மறக்கின்றது. இதனை அடிகள் தொடுத்தழிக்கும் என்கின் றார். பற்றிய பொருளின் தாக்கத்தினாலேயே பலவகையான வேட்கைகளில் ஈடுபட்டுத் திரிதலால், தலை சுற்றி ஆடும்' என்கின்றார். ஏழுபூமி என்றது எழு வகையான மோக விகாரங்களை. மேலும் இந்த மனம் கணவனுக்கு அடங்காத பெண்போலத் தானே வெளிச் சென்று அலையும், அறநெறி யில் மனம் அடங்கி நில்லாது தான் விரும்பிய வண்ணம் வரம்பு கடந்து செல்லுதலால் 'புருடனில் அடங்காத பூவை 'க்கு உவமையாக்கினார். இங்ங்னம் அலைந்து திரியும் மனம் கல்லைவிடவும் இரும்பைவிடவும் மிகுதியான வன்மையைக் காட்டி விடும். ஒரு பொருளின்மீது விருப்பும் வெறுப்பும் மிகுந்த விடத்து மனம் அதனைப் பெறுவதிலும் அல்லது அழிப்பதிலும் தன்நோக்கத்தை நிறைவேற்றுவதில் உறுதி கொள்ளும்போது இரக்கமின்றிச் செயற்படும் தன்மையது. இதனால் கல்லோடி ரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் என்கின்றார் அடிகள். தான் நேரில் காணாமல் பிறர் சொல்லக் கேட்டவற்றையெல்லாம் தான் கண்டனவாகக் காட்டி அதனை அடைய முயலும். இந்த 15. இம்மலம் ஆன்மாக்களை அணுத் தன்மையடையச் செய்தலின் ஆணவம்' எனப் பெயர் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/168&oldid=892162" இலிருந்து மீள்விக்கப்பட்டது