பக்கம்:தாயுமானவர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 152 今 3. தாயுமானவா (ஆசையெனும் - 1) ஆசைக்குப் பெருங்காற்றை உவமை கூறுகின்றார். பெருங்காற்றில் அகப்பட்ட இலவம் பஞ்சு அலைவதுபோல் ஆசையால் மனம் அலையும்போது தமக்கு மோசம் வரும் என்கின்றார். இதனால் தாம் கற்றதும் கேட்ட தும் துர்ந்து முத்திக்கான நேசமும் வாசமும் போய்விடும் என்கின்றார். பிறிதோர் இடத்தில், "பஞ்சாய்ப் பறக்குநெஞ்சப் பாவியைநீ கூவிஜயா அஞ்சாதேஎன்(று) இன்னருள் செயவும் காண்பேனோ?” - காண்பேனோ - 21 என்று கூறுவதையும் காணலாம். சில பாடல்களில் மனத்தினை வானத்திற் பறக்கும் காற்றா டிக்கு உவமை கூறி விளக்குவார். காற்றாடி சுற்றிச் சுற்றித் திரிவதுபோல, மனமும் உழன்று திரிகின்றது என்பார், 'ஆடு கறங்காகி அலமந்து உழன்றுமணம் வாடும் எனைஐயா வாவெனவும் காண்டேனே' - மேலது 22 என்ற பாடலில் விளக்குவார். வாலற்றுப் போனால் காற்றாடி கீழே விழுந்து கிடக்கும். அதுபோல் மனம் வலியற்று அடங் கும்படி இறைவனை அருள்புரிய வேண்டுகின்றார். "வாலற்ற பட்டமென மாயா மனப்படலம் காலற்று விழவும்.முக் கண்ணுடையாய் காண்பேனோ' - மேலது 7 என்ற கண்ணியில் இதனைக் காணலாம். மனத்தை இழித்துக் கூறுதல்: சில இடங்களில் அடிகள் மனத்தை இழித்தும் கடிகின்றார். 'கல்லேனும் ஐயஒரு காலத்தில் உருகும்;என் கல்நெஞ்சம் உருகஇலையே!” - சுகவாரி 3 என்ற பாடற் பகுதியில் தமது நெஞ்சினைக் கல்லினும் வலிய தென்கின்றார். சூரிய காந்தக்கல் ஞாயிற்றின் கதிர்கள் பட்டவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/172&oldid=892167" இலிருந்து மீள்விக்கப்பட்டது