பக்கம்:தாயுமானவர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& -7 冷 மனத்தின் இயல்புகள் ఈ్శః 157 స్థ அடிகள் வென்ற மனத்தை வினைத் தேவதைகட்குப் பலிகொடுத்து விட்டதாக ஒரு பாடலில் (கருணாகரக் கடவுள் - 8) கூறுகின்றார் 'துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்:கன்ம துட்டதே வதைகள்இல்லை; துரியநிறை சாந்ததே வதையாம் உனக்கே: தொழும்பன்அன் பபிடேகநீர்; உள்ளுறையில் என்ஆவி நைவேத்தியம்; ப்ராணன் ஓங்குமதி தூபதிபம்; ஒருகாலம் அன்றிது; சதாகால பூசையா ஒப்புவித்தேன்................ z z என்றது காண்க. இதில் மனத்தினைத் துள்ளுகின்ற ஆட்டிற்கு உவமிக்கின்றார். மனம் சில சமயங்களில் சும்மா இருப்பது போலத் தோன்றி உலகப் பொருள்களில் இடையிடையே சென்று பற்றுகின்றது. பற்றியவுடன் பற்றுக் காரணமாகச் செயல்கள் ஏற்படுகின்றன. இவற்றால் பிறப்பு இறப்புத் துன்பங்கள் விளைகின்றன. இவையே கர்மதுட்ட தேவதைக ளாகையால் மனத்தை அவற்றிற்குப் பலியாக்குகின்றார். சிறு தேவதைகட்குப் பலியிடும் உலக வழக்கையொட்டி இவ் வாறு கூறுகின்றார். சிறு தேவதைகட்கும் பலியிடுதல் கூடாது என்பது பெரியோர் கருத்தாதலின், அதுபற்றி 'துரியநிறை சாந்த தேவதையாம் உனக்கே தொழும்பன்' என்கின்றார். 'தூய்மையும் பொறையும் உடைய உனக்கு அடியன்' என் பது இதன் கருத்து. அன்பு என்பது மன உருக்கத்தால் உண்டாவது. இத னால் அதனை நீருக்கு உவமையாக்குகின்றார். நீர் பயன்படு வது திருமுழுக்கிற்கே யாதலால் 'அன்பு அபிடேக நீர்' என் கின்றார். கண்ணப்ப நாயனார் காளத்தியப்பர் மீது பொழிந்த வாய்நீரை விளைந்த அன்பிற்குச் சேக்கிழார் பெருமான் உவமை கூறியது, ஈண்டு நினைக்கத்தக்கது. இறைவனோடு இரண்டறக் கலப்பது உயிராதலின் நைவேத்தியம் என்று குறிப்பிடுகின்றார். நறும்புகை காற்றினால் நன்மணம் கமழ வீசுகின்றதனால் உடம்பிற்கு ஆதாரமாகிய பிராணனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/177&oldid=892172" இலிருந்து மீள்விக்கப்பட்டது