பக்கம்:தாயுமானவர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 158 శస్త్రి தாயுமானவர் 'தூபம்’ ஆக்குகின்றார். இவண் குறித்த அகப்பூசையினை ஒருகாலம் செய்து ஒருகாலம் செய்யாதிருந்தால் மனம் ஒடுக் கம் அடையாதாதலின், 'சதாகால பூசையா யொப்பு வித்தேன்' என்று கூறுகின்றார். இறைவனை வேண்டுவது: தம் மனத்தைக் குவியச் செய்ய வேண்டும் என இறைவனை இறைஞ்சுகின்றார். ஒரு பாட லில் (பரிபூரணானந்தம் - 9) இதனைக் காணலாம். கேட்கும் போக்கே விந்தையாக உள்ளது. ஆழ்ந்த கடல் செயற்கையா கக் கட்டிய கரையின்றி ஒரு வரம்பில் நிற்கவில்லையா? கொடிய நஞ்சும் அமுதமாகவில்லையா? கடலின் நடுவே வடவை அனல் நிலை பெறவில்லையா?" வானிலே பல கோடி அண்டங்கள் கீழே விழாமல் சாட்டையிலாப் பம்பரங் கள் போல் சுழலவில்லையா?" மேருமலை வில்லாக வளை யவில்லையா?" ஏழு வகையான வியக்கத்தக்க முகில்களும் விண்ணவர் தலைவன் கட்டளைப்படி செல்கின்றன வல்லவா?" இராமன் திருவடி பட்டபோது கல்லாக இருந்த அகலிகை பெண்ணாகவில்லையா? மணிமந்திரம் மருந்து முதலியவற்றால் விரும்பிய சித்திகளைப் பெறுவதற்கு வழிவ குக்கவில்லையா? இத்தகைய அருஞ்செயல்களையெல்லாம் நிகழ்த்தவல்ல உனக்கு, 16. வடவனல் என்பது ஒரு பெண் குதிரை வடிவமாய இருப்பதாகப் புராணம் கூறும். இதனை ஊழித் தீ என்னும் கூறுவர். இது கடலின் நீர் மிகசமற் செய்வதென்றும், ஊழிக் காலத்தில் வெளிப்பட்டு உலக ஒடுக்கத்திற்குக் காரணமாவதென்றும் நூலோர் கூறுவர். இதனை மின்னாற்றல் போன்ற ஒரு வகை வெம்மை ஆற்றல் என்று கருதுவாரும் உளர். 17. வானில் உலகங்கள் நிலைத்திருப்பதற்குக் காரணம் ஒன்றையொன்று தன் பால் ஈர்க்கும் கவர்ச்சி விசை அமைத்து அவற்றிற்கெல்லாம் ஆதரவாயிருப்பது சிவசக்தியே. இதனை ஆதார சக்தி என்னும் கூறுவர். 18. திரிபுர்ம் எரித்த வரலாற்றில் இது கூறப் பெறுகின்றது. 19. இந்த ஏழு மேகங்களும் நீர், பூ, பொன், மணி, மண், கல், தீ என்பவற்றை முறையே பொழிவனவாகும். தாயு-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/178&oldid=892173" இலிருந்து மீள்விக்கப்பட்டது