பக்கம்:தாயுமானவர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வாழ்வில் வினையின் பங்கு செல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன. எனினும், அவை துன்பத்தையும் நுகர நேரிடுகின்றது. சிலருக் குத் தாம் தொடங்கும் செயல் எதுவாயினும் அஃது இனிது முற்றுப் பெறுவதற்குரிய சூழ்நிலைகள் தொடர்ச்சியாக அமைந்து விடுகின்றன. எனினும், வேறு சிலருக்குத் தொடங் கும் செயல்கள் அனைத்திலும் அவை தடைப்படுவதற்குரிய சூழ்நிலைகளே அமைகின்றன. அன்றியும், ஒருவருக்கே சிலகாலம் தொடர்ச்சியாக நல்ல சூழ்நிலைகளே அமைவதை யும், பின்பு சிலகாலம் தீமையான சூழ்நிலைகள் அமைவதை யும் காண்கின்றோம். இவற்றால் இன்பதுன்பங்களுக்குச் சூழ் நிலைதான் காரணமாயினும், அச்சூழ்நிலைகளின் அமைப்பிற் குக் காரணம் வேறொன்று உள்ளது என்பது தெளிவாகின்ற தன்றோ? இந்தக் காரணத்தைத்தான் 'வினை அல்லது கன்மம்' என்று குறிப்பிடுவர் மெய்விளக்க அறிஞர்கள். இன்னும் நாம் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கினால் ஒரு பேருண்மை தட்டுப்படும். ஒருவரது வாக்கையில் இரண்டுப் பகுதிகள் உள்ளன. ஒன்று அகவாழ்க்கைப் பகுதி; மற் றொன்று புறவாழ்க்கைப் பகுதி. அறிவு, அடக்கம், ஒழுக்கம், சால்பு முதலியவை அகவாழ்க்கைப் பகுதிகள், செல்வம் சேர்த்தல், நுகர்தல் முதலியவை புறவாழ்க்கைப் பகுதிகள். புறவாழ்க்கைப் பகுதியில் ஊழின் (மூலகன்மம்) துணை இருந்தால் அல்லாமல் நினைத்தவாறு பெற முடியாது. அக வாழ்க்கைப் பகுதியில் ஊழ் அவரவாக்கு உரிமை கொடுத் துள்ளது. அகவாழ்க்கையில் வேண்டிய வேண்டியாங்கு எய் தலாம். வள்ளுவர் பெருமானும், 1. சித்தாந்தத்தில் கன்மம் பாசத்தில் அடங்கும். பாசங்கள் மூன்று: அவை: ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும். அவை மும்மலங்கள். மலம் - அழுக்கு. ஆன்மாவைப் பற்றியிருப்பது. ஆணவம் நுண்பொருள், எளிதில் உணர முடியாதது. மாயை, பருப்பொருள். கன்மம் இரண்டிற்கும் இடைப்பட்ட பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/180&oldid=892176" இலிருந்து மீள்விக்கப்பட்டது