பக்கம்:தாயுமானவர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 168 & தாயுமானவர் நிலைபெறுத்தும். இங்கு ஆன்மாவின் சுகதுக்கங்களுக்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் நிமித்தம், முதல், துணை ஆகிய மூன்று காரணங்களாக அமைவது குறிப்பிடத்தக்கது. ஆணவத்தோடொப்ப அநாதி யாகச் சொல்லப் பெறும் மூலகன்மம் (மூல வினை) நன்மை, தீமை எனப் பாகுபாடு அடையாமல் பொதுவாய் நிற்கும். பின்னர் அது செயற்படும் காலத்தில் நல்வினையும் தீவினை யும் என இரண்டு வகையாய்ச் சிறப்புற்றுச் செயல்பற்றிப் பலவாகித் திகழும். தாயுமானவர் சொல்கின்றார்: 'இருவினையாகிய (மூல வினை) நோய் என்னைக் கெடுக்க வந்தது. என்னிடம் பேரருளுடைய நீ அவ்விரு வினையைக் கெடுப்பது முறை யன்றோ?' என்கின்றார். இதனை, ‘என்னைக் கெடுக்க இசைந்த இருவினைநோய் தன்னைக் கெடுக்கத் தகாதோ? பராபரமே!’ - பராயரம் - 164 என்ற கண்ணியில் கண்டு மகிழலாம். திண்ணிய வினையைக் கொன்று அடியேனை உய்ய வைத்தால், உனக்குப் புண்ணி யம் அல்லவா?’ என்று ஒரு பாடலில் வேண்டுகின்றார். 'திண்ணிய வினையைக் கொன்று சிறியனை உய்யக் கொண்டால் புண்ணியம் நினக்கே யன்றோ? பூரணா னந்த வாழ்வே." - கற்புறுசிந்தை - 5 என்ற பாடற்பகுதியில் இதனைக் காணலாம். வினையின் மூவகை நிலைகள்: நல்லனவும் தீயனவுமாகச் செயற்படும் வினைகள் ஆகாமியம் என்ற பெயரால் வழங் கும். இஃது இலக்கியங்களில் எதிர்வினை, வருவினை, மேல் வினை என்ற பெயர்களாலும் சுட்டப்பெறும். நல்லனவும், தீயனவுமான வினைகள் சூக்குமமாய் மறைந்து நிலைபெற்று நிற்கும்பொழுது சஞ்சிதம் என்ற பெயரைப் பெறும். இந்நிலை யில் இது அபூர்வம், பழவினை, தெர்ல்வினை, கிடைவினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/188&oldid=892184" இலிருந்து மீள்விக்கப்பட்டது