பக்கம்:தாயுமானவர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆 17G 令 தாயுமானவர் 'குறித்தவித மாதியாற் கூடும்வினை யெல்லாம் வறுத்தவித்தாம் வண்ணம்அருள் மேவும்நாள் எந்நாளே?” - எந்நாட். தத்துவ முறைமை 20 எனக் கூறுவர். இதனையே மணிவாசகப் பெருமானும், 'உனக்கி லாததோர் வித்து மேல்விளை யாமல் என்வினை யொத்தபின் கனக்கி லாத்திருக் கோல நீவந்து காட்டினாய்’ என்ற தம் மணிவாசகத்தால் குறிப்பிடுவர். தன்னுணர்ச்சியால் வினை இயற்றாது திருவருள் நெறி நின்று எதனையும் இயற் றுவார்க்கு வினை பற்றறும்; வினையை வெல்லுதலும் கூடும். 'சிவாய நம'வென்று சிந்தித் திருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை' என்று ஒளவைப் பாட்டி கூறியுள்ளது. இதனை விளக்க வந்துள் ளதேயாகும். வினையின் நிலைமைபற்றி அடிகள் பிறிதோர் பாடலில், 'காகமா னதுகோடி கூடிநின் றாலுமொரு கல்லின்முன் எதிர்நிற்குமோ? கன்மமானவைகோடி முன்னேசெய் தாலும்நின் கருணைப்பிர வாகஅருளைத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லவோ?” - எங்கும் நிறைகின்ற பொருள் - 6 என்று கூறுவர். இங்கு அடிகள் தீவினைக்குக் காகத்தையும் திருவருளுக்குக் கல்லினையும் உவமிக்கன்றார். புத்தி தத்து வத்தைப் பற்றுக் கோடாகாவுள்ள சஞ்சித கன்மங்கள் பலவா கும் என்பதை விளக்குவதற்குக் காகமானது ஒருகோடி என் 6. திருவா.திருக்கழுக்-1 7. நல்வழி 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/190&oldid=892187" இலிருந்து மீள்விக்கப்பட்டது