பக்கம்:தாயுமானவர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் வினையின் பங்கு ※ 171 を கின்றார். அவை புசிக்கப் பெறும்பொழுது, ஆகாமியங்கள் விளையாதிருத்தற்குத் திருவருளே பேருதவி புரிய வேண்டுவ தாதலின் அதனைக் கல் என்கின்றார். கல்லைக் கண்டவுடன் காகங்கள் விலகிப் பறந்தோடுவதுபோலத் திருவருளை நாடும் உள்ளத்தில் தீயனவியற்றும் கருத்துகள் செல்லா என்பது தெளியப்படும். திருவருளின்கண் அழுத்தமான நாட்டம் இல் லாதவர்கள் தவறுதல் கூடும். ஆதலின் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ? என்கின்றார். காகக் கூட்டம்போல் வினைகளும் கூட்டமாக ஒருங்கே வந்து உயிர்களை வருத்து கின்றன என்ற கருத்தும் இதில் பெறப்படுகின்றது. இதே பாடலில், 'வினையெல்லாம் சங்கேத மாய்க்கூடியே தேகமா னதைமிகவும் வாட்டுதே' என்று கூறுவதனாலும் இது தெளியப்படும். காகம் கறுப்பு நிறமாக உள்ளதுபோல, வினைகளும் மயக்கம் விளைத்துப் பந்தத்தைப் பயத்தல் தெளிவு. பிறிதோர் இடத்தில் காகத்தை நல்லதற்கும் உவமையாக் குகின்றார். ஆணவக் காரிருளால் மூடப் பெற்றுக் காகம் போன்றுள்ள யாவும் அகண்டாகார சிவத்தை நாடவேண்டும் என்று ஆற்றுப்படுத்து மிடத்துக் காகத்தின் கூட்ட ஒற்றுமை யைக் காட்டுவதையும் காண்கின்றோம். 'காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போக மெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய், ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற் றிடநாம் இனிஎடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்திரே!” - காடும் கரையும் 3 என்ற திருப்பாடலில் இதனைக் கண்டு தெளியலாம். காகங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/191&oldid=892188" இலிருந்து மீள்விக்கப்பட்டது