பக்கம்:தாயுமானவர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重了4 தாயுமானவர்

桑 弱 o சமஸ்காரங்களாக மனத்தில் பதிவு பெற்றிருக்கும் கர்மங்கள் திரும்பவும் உருவெடுத்து வரும். இதனால் கனவு உண்டா கின்றது. தியானம் பண்ண அமருகின்றபொழுது அவை மிக எளிதில் மனத்தில் தோன்றத் தொடங்குகின்றன. இவற்றை அகற்ற அகற்ற ஆழ்ந்து உள்ளே புதைந்து கிடக்கும் பழைய விருத்திகள் ஓயாது வந்து கொண்டிருக்கும். ஆதலால்தான் அடிகள் பாழ்த்தக் கர்மங்கள் போராடுதே' என்று குறிப்பிடுகின் ត្រ பூர்வமோம்சை என்பது ஆறு சாத்திரங்களுள் ஒன்று. இதன்படி கர்மமே கர்த்தாவாகும். கடவுளை இச்சாத்திரம் அங்கீகரிப்பதில்லை. கர்மமே எல்லாம் வல்லது என்பது இத்தரிசனம் ஏற்றுக் கொள்ளுகின்றது. கர்மம்தான் ஆதியந் தம் அற்றது என்று செப்புகின்றது. இக்கோட்பாட்டினர் கர்மமே எல்லாம் வல்லது என்று நம்புகின்றனர். கர்மத் தையே தெய்வம் என்று போற்றுவது இவர்தம் குறிக்கோள். கர்மத்தின் துணையால் எதை வேண்டுமானாலும் பெறலாம் என்பது இவர்தம் நம்பிக்கை. இவர்கள் கோட்பாட்டின்படி மனத்தகத்தில் முன்பு செய்த வினையின் வேகம் ஓயாது தோன்றி வந்து ஆதிக்கம் புரிகின்றது. இதனை யாராலும் வென்றுவிட முடியாத நிலையில் உள்ளது. பூர்வ மீமாம்சர்க ளது பட்சம் (பக்கம்) கர்மமே எல்லாம் வல்லது என்பது. உத்தரமீமாம்சமாகிய வேதாந்தத்தின் பட்சம் கர்மத்தினும் உயர்ந்தது கடவுளின் கருணை என்பது. இங்கனம் இரண்டு பட்சங்கள் உள்ளன. பூர்வபட்சம் ஒன்று; உத்தரபட்சம் மற்றொன்று. இவற்றுள் பூர்வபட்சத்தை நான் சோர்ந்து விடு வதா? என்னும் கவலை நிறைந்த உணர்வுடன் அடிகள் 'பண்டை உளகர்மமே கர்த்தா எனும் பெயர் பட்சம் நான் இச்சிப் பனோ? என்று பகர்கின்றார். தாம் அக்கோட்பாட்டை இச்சிக்க லாகாது என்ற கருத்துதான் இதில் அடங்கியுள்ளது என்பது அறியத்தக்கது. 9. ஆறு சாத்திரங்களாவன: வேதாந்தம். வைசேடிகம், பாட்டம், பிரபாகரம். பூர்வமீமாம்சை, உத்திர மீமாம்சை என்பன. தாயு-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/194&oldid=892191" இலிருந்து மீள்விக்கப்பட்டது