பக்கம்:தாயுமானவர்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் வினையின் பங்கு 3 is 5 ← § விதியும் மதியும்: விதியை மதியால் வெல்ல முடியுமா? என்பது கேள்வி. மதியானது திருவருள் பதியப்பெற்றால் வெல்லும் ஆற்றலுடையதாகின்றது என்பது அடிகளின் கருத்து. மதி மாயையில் பதிந்து கிடந்தால் விதிவழியே மதியும் செல்லும். இதனை, 'விதியை யும்விதித் தென்னை விதித்திட்ட மதியை யும்விதித்து அம்மதி மாயையில் பதிய வைத்த பசுபதி நின்அருள் கதியை எப்படிக் கண்டு களிப்பதே?” - பொன்னை மாதரை - 83 என்ற பாடலில் குறிப்பிடுவர். உலகத் தொடர்பான நினைவுகள் எல்லாம் வரும் பிறப்பு களுக்கு வித்தாகும் என்பதை, 'எண்ணிய எண்ணம் எல்லாம் இறப்புமேல் பிறப்புக்கு ஆசை பண்ணி. - கற்புறு சிந்தை - 5 என்பதால் தெரிவிக்கின்றார். நினைவுகள் அளவில்லாமல் இருத்தல் போலப் பிறப்புகளும் அளப்பில என்பதை, 'கடல்எத் தனை,மலை எத்தனை, அத்தனை கன்மம்:அதற்(கு) உடல்எத் தனை, அத் தனைகடல் நுண்மணல் ஒக்கும்:இந்த சடலத்தை நான்விடும் முன்னே உனைவந்து சார,இருட் படலத்தை மாற்றப் படாதோ? நிறைந்த பராபரமே!’ - பாயப்புலி - 38 என்ற திருப்பாடல் தெரிவித்தலைக் காணலாம். இறைவனை யன்றி வினை இல்லை என்பதை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/195&oldid=892192" இலிருந்து மீள்விக்கப்பட்டது