பக்கம்:தாயுமானவர்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 • தாயுமானவர் 'நினையும் நினைவும் நினைவுஅன்றி இல்லை; நினைந்திடுங்கால் வினைஎன்று ஒருமுதல் நின்னையல் லாது விளைவதுண்டோ?” - மேலது 39 என்ற பாடலால் புலப்படுத்துவர். வினைபற்றிய மற்றோர் கருத்து: பிராரத்தம், சஞ்சிதம், ஆகா மியம் என்ற மூன்றுவித வினைகளில் பிராரத்தம் அநுபவித்தே தீர வேண்டியது. 'சரனம் ஆகும் தனதாள்.அடைந் தார்க்கெலாம் மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும்பிரான்' என்ற பாசுரத்தால் இப்பிறப்பின் இறுதியில் தான் வீடுபேறு கிடைக்கும் என்பது உறுதியாகின்றது. எனவே, பிராரத் தத்தை அநுபவித்து முடிந்த பிறகே வீடுபேறு கிடைக்கும் என்பது உறுதியாகின்றது. சஞ்சிதம், ஆகாமிய கன்மங்களை இறைவன் தீயினில் தூசாக ஆக்கிவிடுவான் என்பது சொல்லா மல் போதருகின்றது. ஆகாமியம் இல்லாமல் பிராரத்தத்தை அநுபவித்தல் இயலாது என்பது உண்மையேயாயினும், அஃறிணையும் பிரார்த்தத்தை அநுபவித்தல் கூடும். அஃது எங்ங்னமெனில், பிராரத்தத்தை அநுபவித்தற்பொருட்டு நிக ழும் முயற்சி விருப்பு வெறுப்புகளோடு கூடி நிகழும் பொழுதே ஆகாமியம் எனப் பெயர் பெற்று அடுத்த பிறப் பில் தொடரும் சஞ்சிதத்துடன் சேர்ந்துவிடும். விருப்பு வெறுப்பு இல்லையேல் ஆகாமியம் ஆதல் இல்லை. வினைசெயற்படுதல்: உயிர்களால் இயற்றப்படும் வினை அறிவுடையதன்று: அஃது அறிவில்லாத சடம். அதனால், அது செய்தவனைப் பற்ற இயலாது. அஃது எங்கோ ஓரிடத் தில் என்றோ ஒருகாலத்தில் ஏதோ ஒர் உடம்பு கொண்டு செயற்படுகின்றது. செய்யப்பெற்ற செயல் அப்பொழுது நிகழ்ந்து அழிந்து விடுகின்றது. ஆதலால், அது பின்னர் என்றாவது, எங்காவது, எந்த உடம்பிலாவது பயன்தர இய லாது. அதனால், இறைவனே அவரவர் செய்யும் வினையை 10. திருவாய். 9.10:5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/196&oldid=892193" இலிருந்து மீள்விக்கப்பட்டது