பக்கம்:தாயுமானவர்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&) புனிதமெனும் அத்துவிதம் & 181 & நோக்குங்கால் அபேதமாய் இருந்தே பேதமாகின்ற பேதா பேதம் என்ற நிலையைக் காண முடிகின்றது. இவ்வாறு அபேதம், பேதம், பேதாபேதம் என்ற மூன்றுக்கும் பொது வான நிலையை மெய்கண்டார் அவையே தானாய்’ என்ற ஒரு சிறுதொடரால் மின்கை விளக்கொளியைக் காட்டுவார். இதனை நன்குணர்ந்த தாயுமான அடிகள், 'பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாதன்.அருள் மேவுநாள் எந்தாளே!" - எந்நாட். குருமரபின் வணக்கம் 4 என்று விளக்கிக் கூறியிருத்தலால் மேலும் தெளியலாம். அபேதவாதம் கூறுவோர் தம் கொள்கை நிலை பெறு தற்கு 'பிரம்மம், கேவலம், அத்துவிதம்' என, அத்துவிதம் என்பதனோடு கேவலம்" என்ற ஒரு சொல்லைச் சேர்த்துப் பொருள் கொள்வர்; இதனால் அவரது கொள்கை கேவலாத்து விதம் என வழங்கப் பெறுகின்றது. பேதாபேதவாதிகள் தம் கொள்கை நிலை பெறுதற்கு 'பிரம்மம் விசிட்டத்தினால் அத்து விதம்' என அத்துவிதம்' என்பதனோடு "விசிட்டம்' என்ற ஒரு சொல்லைச் சேர்த்துப் பொருள் கொள்வர்; இதனால் அவரது கொள்கை "விசிட்டாத்துவிதம்' என வழங்கப்பெறு கின்றது. மெய்கண்டார் தம் கொள்கையின் பொருட்டு அத்து விதம் என்பதனோடு யாதொரு சொல்லையும் சேர்க்காமல் அப்படியே வைத்துப் பொருள்கொள்வதனால் அவரது கொள்கை சுத்தாத்துவிதம்' எனப் பகரப் பெறுகின்றது. அடி கள் இச்சொல்லை 'புனிதம் எனும் அத்துவிதம் என்று கூறு வார். சுத்தம்’ என்பதைப் 'புனிதம்' என்ற சொல்லால் விளக்குதல் காணத்தக்கது. மெய்கண்டாரின் கொள்கையை அவர்தம் மாணாக்கர்கள் விரித்து விளக்கியுள்ளனர். அருணந்தி சிவாச்சாரியார் 'உல 2. சி.ஞா.போ.சூத்திரம் - 2 3. கேவலம் என்ற சொல் தனிமை எனப் பொருள்படுவது. 4. விசிஷ்டபஸ்ய - உயிர்ப் பொருள், உயிரல் பொருள்களைச் சரீரமாகவுடைய பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/201&oldid=892199" இலிருந்து மீள்விக்கப்பட்டது