பக்கம்:தாயுமானவர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 శః தாயுமானவர் ஆ. 象 கெலாமாகி வேறாய் உடனுமாய' என விளக்குவார். உமா பதி சிவமோ 'பொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் இருள் ஒளிபோல் பேதமும் சொற்பொருள்போல் பேதா தேமும் இன்றி .... உடல் - உயிர், கண் - அருக்கன், அறிவு - ஒளிபோல் பிரிவரும் அத்துவிதமாகும் சிறப்பினதாய்" எனப் பிற மதங்களையும் எடுத்துக் காட்டி மறுத்தும், சித்தாந் தத்தை உவமை முகத்தால் இனிது விளக்குவார். இவர்களுள் அருணந்தி வாக்கினால் மெய்கண்டாரது “அவையே தானே யாய்” என்ற தொடர், அவையேயாய், தானேயாய், அவையே தாணேயாய்' என இரட்டுற மொழிதலால் நின்று 'முதல்வன் கலப்பினால் உலகத்தோடு ஒன்றேயாயும், பொருள் தன்மை யால் வேறேயாயும் உயிருக்கு உயிராதல் தன்மையால் உலகத் தோடு உடனாயும் நிற்பன்' என்ற பேரொளியைப் பெற்று விளக்கம் அடைகிறது. உமாபதி சிவத்தின் வாக்கினால், 'முதல் வன் உலகத்தோடு பொன்னும் பணியும்போல் (ஆபரணம்) அபேதமும் ஆகாமல், இருளும் ஒளியும் போல் பேதமும் ஆகாமல், சொல்லும் பொருளும்போல் பேதாபேதமும் ஆகா மல், கலப்பினால் உடலின் உயிர்போல ஒன்றாயும், பொருள் தன்மையால் கண்ணில் அருக்கன் (சூரியன்) போல் வேறாயும் உயிருக்கு உயிராதல் தன்மையால் கண்ணொளியும் ஆன்ம போதமும்போல உடனாயும் நிற்பன்' என்று விளக்கம் பெறு கின்றது. இவ்வாறு அபேதம், பேதம், பேதாபேதம் என மூன்றற்கும் பொதுவாய் நிற்கும் நிலையே அத்துவிதமாகும் என்பது தெளியப்படும். தாயுமான அடிகளும் தமக்கே உரிய உவமைகள் வாயி லாக அத்துவித நிலையை தெளிவாக விளக்குவார். சிலவற் றைக் காண்போம். 'செங்கதிரின் முன்மதியம் தேசடங்கி நின்றிடல்போல் அங்கனார் தாளில் அடங்கும்நாள் எந்நாளோ!' - எந்நாட். நிற்கும்நிலை 4 5. சித்தியார் - 2.1 6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/202&oldid=892200" இலிருந்து மீள்விக்கப்பட்டது