பக்கம்:தாயுமானவர்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதமெனும் அத்துவிதம் • 185 என்ற கண்ணிகளில் இதனைக் காணலாம். நாம் பிரமம்' என்று பாவனை செய்தால் நாம் என்ற உணர்ச்சி ஆங்காரத்தை உண்டாக்கும் என்று கருதி அப்பாவனையை மறுத்துரைப்பர் அடிகள். (மேலது நிலை பிரிந்தோர் - 7) சிவத்தோடு இரண்டறக் கலக்கும் நிலையில் நிற்பார்க்குச் சிவத்தைக் காண்கின்ற தானும் காணும் பொருளும் வெவ்வே றாகத் தோன்றுதல் கூடாது. அகண்டாகாரமான சிவத்தின் தோற்றமொன்றே நிகழ்தற்குரியது. 'காண்பானும் காட்டுவதும் காட்சியுமாய் நின்றஅந்த வீண்பாவம் போயதுவாய் மேவுநாள் எந்நாளே” - எந்நாட். நிற்கும்நிலை 20 என்பதில் இக்கருத்தைக் காணலாம். இக்கருத்து, 'காண்டானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்துண்மை காண்பார்கள் நன்முத்தி கானார்கள் - காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் தன்கடந்தைச் சம்பந்தன் வாட்டுநெறி வாராதவர்' என்ற மறைஞான சம்பந்தரின் கருத்தையொட்டியது. மெய்கண் டாருக்கு முன்பிருந்த ஞானசம்பந்தப் பெருமானும், தமது திருவீழிமிழலைப் பதிகத்தில், “ஈறாய்முதல் ஒன்றாய் இரு பெண்ஆண்குனம் மூன்றாய் மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய் ஆறாய்சுவை ஏழோசையொடு எட்டுத்திசை தானாய் வேறாய்உடன் ஆனான்.இடம் விழிம்மிழ லையே'. ' 8. வினாவெண்பா-11 9. சம்ப.தேவாரம்-1.11:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/205&oldid=892203" இலிருந்து மீள்விக்கப்பட்டது