பக்கம்:தாயுமானவர்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

够 186 * தாயுமானவர் என்ற திருப்பாடலில் இக்கருத்தைப் புலப்படுத்தியிருத்த லைக் கண்டு தெளியலாம். காண்பானும் காணும் பொருளுமாய்ப் பிரித்து நோக்குங் கால் காணும் பொருளை முன்னிலையாகச் சுட்டியுணர்தல் நேரும். இது சுட்டிறந்த ஞானத்திற்கு இடையூறாக முடியும். எனவே அடிகள், 'முன்னிலை ஒழிந்திட அகண்டிதா காரமாய் மூதறிவு மேல்உதிப்ப முன்பினொடு கீழ்மேல் நடுப்பக்கம் என்னாமல் முற்றும்ஆ னந்தநிறைவே என்னிலைமை யாய்நிற்க இயல்புகூர் அருள்வடிவம் எந்நாளும் வாழிவாழி.” - எங்கும் நிறைகின்ற பொருள் - 11 என்றும், 'முன்னிலைச் சுட்டொழி நெஞ்சேநின் போதம் முளைக்கில்ஜயோ பின்னிலை சன்பம் பிறக்கும்:கண் டாய்....” - பாயப்புலி - 23 என்றும் கூறுவார். இங்ங்ணமே 'அது' என்று பரம்பொருளைக் குறித்து நினைத்தாலும், 'அது' என்ற சொல் சுட்டுணர்வினை எழுப்பி அதீத பாவனைக்கு இடையூறாகி விடும் என்று கருதிய அடிகள், 'அது'என்றுன்னும் அதுவும் அறநின்ற முதிய ஞானிகள் மோனப் பொருளது எதுஎன் றெண்ணி இறைஞ்சுவன் எழையேன்: மதியுள் நின்றின்ப வாரி வழங்குமே!’ - பொன்னைமாதரை - 29 என்று இயம்புவார். மோனம் அல்லது பேசாநிலை: எச்சொல்லாலும் இறைவ னைச் சுட்டாதுனரும் நிலை பேசாநிலை என வழங்கப்டெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/206&oldid=892204" இலிருந்து மீள்விக்கப்பட்டது