பக்கம்:தாயுமானவர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதமெனும் அத்துவிதம் ಫ್ಲಿ 87 ಫಿ றும். இதுவே மோனம் என்றும் மொழியப் பெறும். மோனம் என்பது ஞான வரம்பு " என்பது ஒளவைப் பாட்டி யின் அருள்வாக்கு. செயலற்றுப் பேச்சுமற்று இருக்கும் நிலையே "சும்மா இருக்கின்ற நிலை என வழங்கப்படும். அத்துவித நிலை, மோன நிலை, சுமாவிருக்கும் நிலை - இவை மூன்றும் ஒரு நிலையையே குறிக்கும். மிகச் சுருங்கிய சொல்லால் பெரிய பொருளைத் தெரிவிப்பவை. ஒரு பாடலின் (ஆகாரபு வனம் 22) இறுதியில், "அதுவானால் அதுவாவர்; அதுவே சொல்லும்’ என்கின்றார். இதில் முதல் 'அது' அத்துவித பாவனையையும், இரண்டாவது அது சிவம் என்பதையும் மூன்றாவது 'அது' சிவாநுபவத்தையும் குறிக்கும். இதற்கு அடுத்த பாடலில் (ஆ.பு.23) அத்துவித ஞானமாகிய மோனத்தைத் தவிர விட் டின்பம் அடைவதற்கு வேறு வழியில்லை என்பதை அடிகள் தெளிவுறுத்துகின்றார். 'அது என்றால் எது? என்ற ஆசங்கை உண்டாகும். ஆதலால் அது என்ற கருத்தையும் அறவேயொ ழித்து மதுவுண்ட வண்டுபோல் சனகாதி மன்னர்களும் சுகர் முதலிய முனியுங்கவர்களும் பேரின்ப நுகர்ச்சியால் அசை வின்றி வாழ்ந்தனர்' என்கின்றார். இதே கருத்தை வேறு பல இடங்களிலும் வற்புறுத்துவர். 'முடிவிலா வீட்டின் வாழ்க்கைவேண் டினர்க்குன் மோனமல் லால்வழி, உண்டோ?” - ஆரணம் 10 'செகங்கள் எங்கும் திரிந்துநல் மோனத்தை உகந்த பேர்உனை ஒன்றுவர் ஐயனே!” - பொன்னைமாதரை - 44 'அத்துவிதமான ஐக்கிய அதுபவமே சுத்தநிலை” - பராயரம் 293 10. கொன்றைவேந்தன் - 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/207&oldid=892205" இலிருந்து மீள்விக்கப்பட்டது