பக்கம்:தாயுமானவர்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 188 • தாயுமானவர் "........... மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதம் சாரும்நாள் எந்நாளோ!' - எந்நாட் நிற்கும் நிலை 28 என்பவற்றில் இதனைக் காணலாம். பேசா நிலையாகிய மெளனத்தை முடிந்த நிலையாக இறைவன் வைத்ததற்குக் காரணம் என்ன? இந்த வினாவை எழுப்பிக் கொண்டு அடிகள் இதற்குக் கூறும் விடை நயமாக அமைந்துள்ளது. 'இவன் வஞ்சமுடையவன்; இவனோடு வாய் பேசுதல் தவறு என இறைவன் கருதினமையை இதற் குக் காரணம்' என்கின்றார். 'நலமேதும் அறியாத என்னைச் - சத்த நாதாந்த மோனமாம் நாட்டம் தந்தே" - ஆனந்தக் களிப்பு - 17 என்பதிலும் ஒராற்றால் இக்கருத்து அமைந்திருத்தல் கான Gl)fffp. 'மெளனம், மெளனம்’ என்று வாயினாற் பேசாமலும், கையை அடைக்காமலும் இருப்பதாலும் பயனில்லை. இராப் பகல் அற்ற உணர்ச்சியோடு இறைவனை அறிவினால் நாடியி ருத்தலே உண்மையான மெளனம் ஆகும். 'வாய்க்கும் கைக்கும் மெளன. மெளனமென்று ஏய்க்கும் சொற்கொண்டு இராப்பகல் அற்றிடா நாய்க்கும் இன்ப முண்டோ?" - பொன்னைமாதரை 42 என்ற பாடலில் இக்கருத்தைக் காணலாம். பிறிதோர் இடத்தில், 'இருவினைக ளற்றிரவு பகலென்ப தறியாத ஏகாந்த மோனஞான இன்பநிட் டையர்கோடி’ - மெளனகுருவணக்கம் - 8 என்பர். இதை விளக்குவோம். ஞானிகட்கு உடல் உணர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/208&oldid=892206" இலிருந்து மீள்விக்கப்பட்டது