பக்கம்:தாயுமானவர்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதமெனும் அத்துவிதம் * 189 令 இல்லை. ஆதலால் உடலைச் சார்ந்துள்ள இருவினைப் பயன் கள் இல்லை; இருவினைகளால் விளையும் இன்ப துன்பமும் இல்லை. ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்' என்பது அதிவீர ராமபாண்டியரின் அருள்வாக்கு. ஞானிகள் வினைப் பயனைக் கடந்திருப்பதுபோல் காலத்தையும் கடந்துள்ளனர். இவர்கள் காலத்தால் ஒருபொழுதும் கட்டுண்டு இருப்ப தில்லை. காலம் மனநிலையைப் பொறுத்தது. மனம் செயற்ப டும் பொழுது காலத்தைப் பற்றிய உணர்வு வருகின்றது; அது செயலற்ற நிலையில் காலத்தைப் பற்றிய எண்ணமே எழுவ தில்லை. மனம் அடங்கப் பெற்ற ஞானியர்க்கு கணப்பொழு தும் கற்ப காலமும் ஒன்றேயாகும். இவர்கட்கு இரவுபற்றிய உணர்வும் பகலைப் பற்றிய சிந்தனையும் இல்லை. சீவபோதம் அற்று சிவபோதம் ஒன்றே நிலைத்துள்ளது. அவர்தம் உடல் எங்கு, எந்நிலையில் இருப்பினும் அவர்கள் தனிமையில் இருப்பவர்களாகின்றனர். இதனால் பேச்சுக்கும் இடம் இல் லாது போகின்றது. இவர்கள் பரமான்மா சொரூபத்தில் திளைத்திருப்பதால் இவர்கள் மோன நிலையில் உள்ளவர்க ளாகக் கருதலாம். கல்லுக்கும் நிர்விகல்ப சமாதியில் ஊறியி ருக்கும் ஞானியர்கட்கும் அதிக வேற்றுமை இல்லை. கல்’ என்ற உயிர் ஆன்ம பரிபாகத்தில் தொடக்க நிலையில் உள் ளது. ஞானியோ ஆன்ம பரிபாகத்தில் நிறைவடைந்த நிலை யில் இருக்கின்றார். இத்தகைய ஞானிகள் எண்ணிக்கையில் அடங்காத பேர்கள் இறைவன் முன் மோன நிலையில் - பேரின்பத்தை நுகர்ந்த நிலையில் - இருக்கின்றனர். இக்கருத் துகள் யாவும் இவண் குறிப்பிட்ட பாடற் பகுதியில் அடங்கி புள்ளன. மோன நிலையைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் அடிகள் குறிப்பிடுவதையும் காண்டோம். 'சைவமுத லாம்.அளவில் சமயமும் வகுத்துமேற் சமயம் கடந்தமோன சமரசம் வகுத்தநீ” - சின்மையானந்த குரு - 4 11. வெற்றிவேற்கை - 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/209&oldid=892207" இலிருந்து மீள்விக்கப்பட்டது