பக்கம்:தாயுமானவர்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதமெனும் அத்துவிதம் & 191 & ஒராற்றால் நம்முடைய ஆழ்ந்த உறக்கத்துடன் இதனை ஒப்பிடலாம். ஆழ்ந்து உறக்கம் கொள்ளுகிறவர்களுக் கிடை யில் விழிப்பில் உள்ள வேற்றுமை இல்லை. வேற்றுமையைக் கடந்த மோன ஒற்றுமை நிலை இது. ஆனால், இது அஞ்ஞா னத்தில் மறைந்து கிடக்கின்ற நிலை. சமயம் காட்டுகின்ற குறியோ ஞானத்தில் தெளிந்து திரண்டு கிடக்கும் பேரறிவு மோனநிலை. இந்த நிலையில் உயிர்கள் அனைத்தும் பேரறி வுப் பெருநிலையில் ஒன்றுபட்டு விடுகின்றன. ஆதலால் இங்கு உண்மையான சமரசம் திகழ்கின்றது. இலட்சியத்தில் ஒன்றுபட்ட நிலைதான் சமரச நிலை. இதைத்தான் அடிகள் மேல்சமயம் கடந்த மோன ரசம் வகுத்தநீ என்று இறைவனைக் குறிப்பிடுகின்றார். மோனநிலையை நாடித் திரிந்த அடிகள் பல இடங்களில் அதைப் பன்னி உரைக்கின்றார். 'சொல்லாடா ஊமையரைப்போல் சொல்லிறந்து நீயாகின் அல்லால் எனக்குமுத்தி ஆமோ? பராபரமே!” - பராயரம் 76 என்றும், 'பேச்சாகா மோனம் பிறவா முளைத்ததென்றற்கு ஆச்சாச்சு மேற்பயனுண் டாமோ? பராபரமே!” - மேலது 77 என்றும், “வாய்பேசா ஊமையென வைக்கஎன்றோ நீமெளனத் தாயாக வந்தருளைத் தந்தாய் பராபரமே!’ - மேலது 126 என்றும் இங்ாவனம் பலவாறாகவும் பகர்கின்றார். மோனநிலை எய்திய பின் அடிகள் இந்நிலையைப் பற் றற்று விதந்தோதுதல் அவர்தம் தனிச்சிறப்பு. 'ஆனந்த மோனகுரு வாம்எனவே என்அறிவின் மோனந் தனக்கிசைய முற்றியதால் - தேனுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/211&oldid=892210" இலிருந்து மீள்விக்கப்பட்டது