பக்கம்:தாயுமானவர்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதமெனும் அத்துவிதம் • 193 శ. 'கற்றதும்கேட் டதுந்தானே ஏதுக் காகக் ? கடம்படம்என்று உருட்டுதற்கோ? கல்லால் எம்மான் குற்றமறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு குணங்குறிஅற் றின்பநிட்டை கூடஅன்றோ? - நின்றநில்ை 3 'நேச நிருவிகற்ப நிட்டையல்லால் உன்னடிமைக்கு ஆசை யுண்டோ? நீயறியாதன்றே பராபரமே!” - பராபரம் 51 என்ற பாடல்களில் நிட்டையைத் தெளிவாக்கியுள்ளமை அறி யப்படும். ஞானநிட்டையின் இயல்பு பிறிதோரிடத்தில் சுருக்கமாக உரைக்கின்றார். "ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல்விசை அடங்கிமனம் வீழ, நேரே அறியாமை யாகின்ற இருள்அகல இருள்ஒளியும் அல்லா திருந்தவெளிபோல் கோடா தெனைக்கண்டு எனக்குள்நிறை சாந்தவெளி கூடியின் பாதீதமும் கூடனேனோ?” - தேசோமயானந்தம் 4 என்ற பாடற்பகுதியில் இதனைக் காணலாம். 'ஆடாமல் நின்றுவிட்ட பம்பரம்போல் மனம் விசையொடுங்கி விழவும், அறியாமையாகிய இருள் நீங்கவும், இருளொளி இரண்டுமல் லாத அருள்வெளியோடு அத்துவிதமான என்னைக் கண்டு என்னுள்ளே இருக்கும் சாந்தவெளியாகிய பரம்பொருளைக் கூடி, அதீமான இன்பநிலையை நான் கூடினேன் அல்லனே' என்று தமது ஞான பெருவிருப்பத்தைக் குறித்தமை இதில் リffGörg Göffむf)。 இந்த ஞானநிட்டையின் இயல்பு இன்னொரு பாடலில் விரித்தோதப் பெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/213&oldid=892212" இலிருந்து மீள்விக்கப்பட்டது