பக்கம்:தாயுமானவர்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& ళ 194 令》 盗 தாயுமானவர் "கூடுத லுடன்பிரித லற்று,திர்த் தொந்தமாய்க் குவிதலுடன் விரிதலற்றுக் குணம்அற்று வரவினொடு போக்கற்று, நிலையான குறியற்று, மலமும்அற்று, நாடுதலும், அற்று, மேல் கீழ்நடுப் பக்கமென நண்ணுதலும் அற்றுவிந்து நாதம்அற் றைவகைப் பூதபேதமும்அற்று. ஞாதுருவின் ஞானம்அற்று வாடுதலும் அற்று, மேல் ஒன்றற் றிரண்டற்று. வாக்கற்று மனமும்அற்று, மன்னுபரி பூரணச் சுகவாரி தன்னிலே வாய்மடுத் துண்டு,அவசமாய்த் தேடுதலும் அற்றஇடம் நிலை...' - சின்மையானந்தகுரு 8 என்ற பாடலில் இதனைக் காணலாம். இத்திருப்பாடலில் ஆழங்கால் படுவோம், படைப்பு ஏணியில் மனிதன் மிக உயர்நிலையில் இருப்பவன். அவனுக் குச் சிந்திக்கும் திறன் உண்டு. சென்றதைப்பற்றியும் நிகழ்வ தைப் பற்றியும் எண்ணிப் பார்க்கும் திறன் மனிதனுக்கு உண்டு. இத்திறனைச் சிறந்த முறையில் வளர்த்துக் கொண்ட வர்கள் நிறை ஞானிகள் எனப்படுபவர்கள். தாங்கள் எப்பொ ருளினின்றும் தோன்றினவர்கள், அந்த மூலப் பொருளுக்கும் தங்களுக்கும் உள்ள தொடர்பு யாது? அந்த மூலப் பொரு ளைத் திரும்பவும் அடைதல் எங்ங்னம்? என்பன போன்ற வினாக்கள் ஞானநெறியில் செல்லுபவர்களிடம் எழுகின்றன. இந்த அடிப்படையான உண்மைகளைத் தெரிந்து கொள்கின் றவர்கள் நிறைஞானிகளாகின்றனர். இந்த நிறை நிலை உண் டாயிருக்கும் கணக்கற்ற ஆன்றோர்களுள் தாயுமானவரும் ஒருவர். இவர் தாம் பெற்ற பேற்றினைச் சொல்லால் சித்திரிக்க முயலுகின்றார். இந்த முயற்சியையே இத்திருப்பாடலில் நாம் காண்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/214&oldid=892213" இலிருந்து மீள்விக்கப்பட்டது