பக்கம்:தாயுமானவர்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 196 & தாயுமானவர் பூதியில் உள்ளபடி அறிந்து கொள்ளுகின்றபொழுது அவன் தன் ஆன்ம சொரூபத்திற்கு குவிதலுடன் விரிதலற்று இருக் கும் நிலை யாண்டும் சொந்தமானது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இயற்கை சத்துவம், இராசசம், தாமசம் என்ற முக்குண மயமானது இக்குணங்களின் தாரதம்மியத்தால் இயற்கை தோற்றத்துக்கு வந்துள்ளது.' நிறமில்லாத பகலவன் ஒளி முப்படைக் கண்ணாடிப் படிகத்தினுள் புகும்பொழுது ஏழு நிறங்களாகப் பிரிகின்றது. நிறமற்ற ஒளி நிறமுள்ளதாக மாறி அமையும்பொழுது இயற்கைத் தோற்றம் உண்டாகின்றது. இதே முறையில் குணபேதம் மாறி அமையும்பொழுது இயற்கை தென்படுகின்றது. ஏழு நிறங்களும் மீண்டும் ஒன்று பட்டால் நிறமற்ற ஒளியாய்விடும். முக்குணங்களும் ஒன்று படும்பொழுது இயற்கை என்னும் பெயர் போய் மெய்ப்பொ ருள் என்னும் பெயர் வந்தமைகின்றது. முக்குணத்தில் மனி தன் கட்டுண்டு கிடக்கின்றபொழுது அவன் இயற்கை சொரூ பம்; அப்பொழுது அவன் 'சீவான்மா என்ற பெயர் பெறுகின் றான். முக்குனங்கள் அவனிடத்து ஒடுங்கி மறைந்த நிலையை எய்துங்கால் ஆவன். மெய்ப்பொருள் சொரூப மாய் விடுகின்றான். இந்த நிலையைத்தான் அடிகள் குண மற்று' என்று குறிப்பிடுவது. ஒரு பொருள் இருக்கும் இடத்தைவிட்டு அகன்றால் அது போக்கு என்றும், இல்லாத இடத்தில் தோன்றுங்கால் அது 'வரவு' என்றும் கூறப்பெறும். மனிதன் தன்னைச் சீவனாகக் கருதிக் கொண்டிருக்கும்பொழுது வெவ்வேறு உலகங்கட்குப் போகின்றதாகவும், வருகிறதாகவும் கருதுகின்றான்; இஃது ஒருவித மயக்கம். அவன் தன்னை முற்றிலும் பக்குவப்படுத் திக் கொண்டபிறகு அந்த மயக்கம் மறைந்துவிடுகின்றது. காரணம், இடம் அல்லது பேதம் என்பதே கற்பனை. நெடுந் 14. இந்த மூன்று குணங்களும் சமமான நிலைக்கு வரும்பொழுது பிரளயம் ஏற்படும். இந்தக் குனங்கள் ஏற்றத் தாழ்வை அடையும்பொழுது படைப்பு நடைபெறுகின்றது. ஏற்றத் தாழ்வு மாறிக் கொண்டே போகும் நிலைதான் பரிணாமம் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/216&oldid=892215" இலிருந்து மீள்விக்கப்பட்டது