பக்கம்:தாயுமானவர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதமெனும் அத்துவிதம் 哆 197 * தொலைவிலுள்ள அண்டங்கள் என்பவை யாவும் மனத்தின் கற்பனை. மனம் ஒடுங்குமிடத்து இடமும் ஒடுங்கி விடுகின் றது. மனிதனின் சுழுத்தி அவத்தையே இதற்குச் சான்றாகும். இந்த அவத்தையின்போது மனிதனுக்குப் போக்கும் இல்லை; வரவும் இல்லை. தெளிந்த ஞானநிலையும் இத்தகையதே. இக்கோட்பாட்டை அடிகள் வரவினொடு போக்கற்று என்று குறிப்பிடுகின்றார். துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் நிலைத்திருப்பது. அதனைக் குறியாகக் கொண்டே ஏனைய நட்சத்திரங்கள் இயங்கி வருகின்றன. துருவ நட்சத்திரம் போன்றவர் கடவுள். மக்களாகிய நாம் ஏனைய நட்சத்திரங்கள் போன்றவர்கள். துருவம் என்பதே இறைவனுக்கும் பெயர். 'துருவம்' என்ற சொல் நிலையாயிருத்தல் என்று பொருள் படுகின்றது. நிலைத்த பொருளைக் குறியாகக் கொண்டு அதை அடைதற் குப் பல நெறிகளைக் கையாளுகின்றோம். அதை அடைந்த பிறகு அது சென்றடையாப் பொருள் என்னும் உண்மை தெளிவாகின்றது. அது முற்றிலும் தன்மயமாய் விடுகின்ற பொழுது அது தனக்குத்தானே குறியாய் இருப்பதில்லை. இக்கருத்தே பாடலில் நிலையான குறியற்று' என்று வருகின் 鲑· உயிர்களைச் சீவர்கள் என்கின்றோம். மலத்துடன் கூடி யிருப்பதால் இவர்கள் சீவர்களாக இயங்குகின்றனர். மலம் - அழுகு. இயற்கையில் மலம் என்பது ஒன்று இல்லை. நிலைமாறி இருக்கும் பொழுது நிர்மலப் பொருளை மலம் என்கின்றோம். ஒருகாட்சியில் மலமாகத் தோன்றுவது பிறி தொரு காட்சியில் தூயதாகத் தென்படுகின்றது. பசுவின் சாணம் அதற்கு மலம்; நமக்கு அது துயது. இப்படி இயற்கை முழுவதையும் ஆய்ந்து நோக்கினால் ஒரு நிலையில் மலமாக இருப்பது பிறிதொரு நிலையில் மலமற்றதாகத் தென்படுவ தைக் காண முடிகின்றது. ஆணவத்தை மலம் என்கின்றோம். சிற்றுயிர் பேருயிராகப் பரிணமிப்பதற்கு ஆணவம் தேவைப் படுகின்றது. பேருயிர் பரம்பொருளாகப் பரிணமிப்பதற்கு அந்த ஆணவம் அகல வேண்டும். ஆன்மா நிறைநிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/217&oldid=892216" இலிருந்து மீள்விக்கப்பட்டது