பக்கம்:தாயுமானவர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o புனிதமெனும் அத்துவிதம் ళ 199 திக் கொண்டால் அது கிட்டுவது உறுதி. இக்கருத்து விந்துநாத மற்று' என்ற தொடரில் அடங்கியுள்ளது. ஒசையினின்று உலகம் எப்படி உண்டாகின்றது என்று வினவலாம். தாமசாகங்காரம் தந்மாத்திரைகள்' மூலம் பூதங் களை உண்டாக்குகின்றது. சத்த தந்மாத்திரை - ஆகாயம்; ஸ்பர்சதந்மாத்திரை - வாயு, ரூபதந்மாத்திரை - தேசு, இரத தந்மாத்திரை - நீர்; மன தந்மாத்திரை - பூமி. இந்த முறையில் ஐம்பூதங்கள் உண்டாகின்றன. இவை தோன்றி வந்த முறை யிலேயே ஒடுங்கிவிடவும் கூடும். ஒடுங்கிய நிலையில் இந்த ஐந்து பூதங்களையும் பாகு படுத்த முடியாது. ஒரே அபேத நிலையில் அவை மறைந்து விடுகின்றன. இந்த மாற்றம் 'ஐவகை பூதபேதமுமற்று' என்ற தொடரில் அடங்கியுள்ளது. இந்த அகிலம் தோற்றத்திற்கு வருகின்றபொழுது அது சேதநப் பொருளாகவும் அசேதநப் பொருளாகவும் காட்சி தருகின்றது. ஒரு நிலையில் அது சேதநப் பொருளாகத் தென்படுகின்றது. மற்றொரு நிலையில் அஃது அசேதநப் (சடப்) பொருளாகத் தன்னைக் காட்டுகின்றது. சேதநம், சடம் என்கின்ற இரண்டு நிலைகளையும் தெளிவாகப் பிரித்து அறிதல் கூடும். காணும் தன்மை சேதநனுக்கு உண்டு. காணப் பெறும் தன்மை சடத்துக்கு உண்டு. மக்களாகிய நமது அமைப்பிலே இந்த இரண்டு கூறுகளையும் காணலாம். இந்த உடல் என்னுடையது எனக் கருதி மனிதன் தன் உடலை ஓர்கின்றான். ஓர்கின்ற மனிதனை ஞாதுரு என்று வடமொழி யில் சொல்வர். காண்போன், அறிவன் என்று தமிழில் சொல்ல லாம். உடலைக் காண்டல் அல்லது பொருள்படுத்தி உணர் தல் அந்தக் காண்போனிடத்து நிகழ்கின்றது. காணுதல் 15. தத்மாத்திரை என்பது முந்திய நிலை முழுதும் கழியாமலும் பிந்திய நிலை முழுதும் வராமலும் இருக்க நடுவிலுள்ள நிலை. இந்த நிலை பாலின் தன்மை முழுதும் நீங்காமலும் தயிரின் தன்மை முழுதும் வராமலும் இருக்கும் நிலைமை போன்றது. எ-டு: ஸ்பர்சதந்மாத்திரை என்பது ஆகாயத்தின் நிலைமை முழுதும் நீங்காமலும் வாயுவின் நிலைமை முழுதும் வராமலுமுள்ள ஒரு நிலையிலுள்ள திரவியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/219&oldid=892218" இலிருந்து மீள்விக்கப்பட்டது