பக்கம்:தாயுமானவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தல்ல என்பதைக் கட்புலனாக உலகுக்கு அறிவித்ததே இந்த அற்புதம். சற்றேறக்குறைய 400 ஆண்டுகட்குமுன் இத்திருத்தலத் தில் உழுவித்துண்ணும் வேளாளர் மரபில் வந்தவர் கேடிலியப் பப் பிள்ளை என்ற பெரியார். இவர்தம் மரபிற்கேற்பவும் தம் இயல்பிற்கேற்பவும் சிவபக்தி சிவனடியார் பக்தி முதலிய சிவநெறி ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய கஜவல்லி அம்மை யார் என்பவரை தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்று இல்ல றம் என்னும் நல்லறத்தை நடத்தி வந்தார். 'கேடிலியை நாடும் அவர் கேடிலாரே என்ற அப்பர் பெருமானின் கீழ்வேளுர் தேவாரத்தினால் (6.67) 'கேடிலி' என்பது சிவபெருமானின் பெயர் என்பது இனிது புலனாகும். கேடிலியப்பன் என்ற பெயர் தனித் தமிழாயிருப்பதும், இக்காலத்தில் இத்தகைய பெயர்கள் அருகி வருவதும் சிந்திக்கத்தக்கவை. கேடிலியப் பப் பிள்ளைக்கு வேதாரண்ய பிள்ளை' என்ற தமையனார் ஒருவர் இருந்தார். கேடிலியப்பப் பிள்ளையவர்களின் சிவபக்தி, பண்பாடு, நல்லொழுக்கம் முதலியவற்றைக் கண்ட சைவ ஆதீனத்தார் இவரைத் திருமறைக்காட்டுத் திருக்கோயில் முக்கிய அறத் தலைவராக நியமித்தனர். இந்த அலுவலை மிகவும் சிறப்பு டன் புரிந்து பொதுமக்களின் பாராட்டுதலைப் பெற்றார். மறைக்காட்டு மணாளரின் திருவருளால் பக்தி நெறியில் வழு வாத கேடிலியப்பப் பிள்ளைக்கு ஒர் ஆண் மகப் பேறு கிடைத்தது. இந்தப் பிள்ளைக்குச் சிவசிதம்பரம் என்ற திருநா மம் சூட்டி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தார். கேடிலியப்பரின் பதவி மாற்றம்: அந்நாளில் திருச்சிராப்பள் ளியை ஆண்டு வந்தவர் நாயக்கர் வழியில் எட்டாவது தலைமுறை அரசராகிய முத்துக்கிருட்டின நாயக்கர் என்பவர். இவர் திருத்தல வழிபாட்டின் நிமித்தம் திருமறைக்காடு வந் தார். அவர் வந்தபொழுது கேடிலியப்பப் பிள்ளையவர்கள் அரசரை நன்கு வரவேற்று இறைவனைச் சேவித்தல் முதலிய வைகளை முன்னிருந்து சிறப்புறச் செய்வித்தார். இவற்றைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/22&oldid=892219" இலிருந்து மீள்விக்கப்பட்டது