பக்கம்:தாயுமானவர்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதமெனும் அத்துவிதம் & 201 & சொற்களால் ஒன்றை விளக்குங்கால் நாம் அப்பொரு ளுக்கு எல்லை கட்டி விடுகின்றோம். விளக்கம் பெறும் போது, பொருள் இன்ன தன்மையுடையது, இன்ன தன்மை அற்றது என்று பாகுபடுத்தப் பெறுங்கால் அஃது எல்லைக்கு உட்பட்டு விடுகின்றது. ஒற்றுமை வேற்றுமைகளைக் காட் டும்போது அது மற்ற பொருள்களோடு சீர்தூக்கப்படுகின் றது. உலகிலுள்ள பொருள்கள் யாவும் இங்ங்னம் விளக்கம் அடையுங்கால் அவை தாமாக எல்லைக்குள் அடங்கி விடு கின்றன. ஆனால், பரம்பொருள் எதனோடும் வைத்து சீர்துக் கப்படுவதன்று; அது தனக்கு உவமை இல்லாதது; சொல்லுக் கடங்காதது". பல கொள்கைகளும் கோட்பாடுகளும் மனத் திற்கு எட்டுகின்றன; மனத்தால் கிரகிக்கப்படும் பொருள்கள் இவ்வுலகில் உள்ளன. மனத்தால் உன்னப்படும் பொருள் களை சொற்களாலும் விளக்க முடியும். மனத்திற்கு எட்டாத தைச் சொற்களால் சொல்ல முடியாது. அது 'மனமாதிக்கெட் டாத பேரின்ப மயமானது'. இக்கோட்பாட்டைத்தான் அடி கள் வாக்கற்று மனமுமற்று' என்று குறிப்பிடுகின்றார். "பூரணம் என்ற சொல் எல்லையில் அடங்காததைக் குறிக்கின்றது. இயற்கையில் உள்ள பொருள்கள் யாவும் எல்லைக்குட்பட்டவையாதலால் அவை பூரணப் பொருளி படத்து அடக்கம். இந்தப் பூரணம் பரிபூரணம் ஆகும்போது குறையொன்றுமில்லாத நிறை நிலையாக ஆய்விடுகின்றது. இந்தப் பரிபூரணப் பொருள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது; அதில் அடங்காதது. வெட்டவெளி எங்ங்னம் அண்டங்கள் அனைத்தையும் தன்னகத்து அடக்கி வைத்துக் கொண்டு அந்த அண்டங்கட்கும் அப்பாலும் இருப்பதுபோல், பரிபூர ணத்தில் யாவும் நிலைத்துள்ளன. அதற்குப் போக்கும் இல்லை; வரவும் இல்லை. அது யாண்டும் இருக்கின்றபடியே இருந்து விடுகின்றது. இந்த நிலைபேறுதான் மன்னுதல் என்ற சொல் குறிப்பது. சொல்லுக்குள் அடங்காத பொரு ளுக்கு 'மன்னுபரிபூரணம் என்னும் சொற்றொடர் ஓரளவு பொருத்தமாக அமைந்து விடுகின்றது. 16. இப்பொருள் விளக்கத்திற்கு அடங்காத பொருளாக இருப்பதால் இஃது ஒன்றுதான் மனிதனுடைய நாவினால் எச்சில் படாதது என்று விளக்குவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/221&oldid=892221" இலிருந்து மீள்விக்கப்பட்டது