பக்கம்:தாயுமானவர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதமெனும் அத்துவிதம் ※ 2O3 * இந்தப் பரிபூரணப் பேரானந்த நிலை புறவுலகில் தேடிக் கண்டுபிடிக்கப்படுவதன்று. இதுகாறும் சீவனிடம் நிலைபெற் றிருந்த சிற்றுணர்வு பரவசம் அடைந்த பிறகு பேருணர்வாக விரிவடைந்து விடுகின்றது. தன்னில் தானாய் உள்ள நிலை அது. அது தேடுதலுமற்ற இடம் நிலை என்று அடிகள் அதனைக் காட்டுவார். இந்த மேலான நிலையே ஞான நிட்டை என்ற பேரானந்த நிலை. இந்த ஞான நிட்டையையே அடிகள் சகசநிட்டை என்றும் குறிப்பிடுவர். சகசம்' என்ற சொல்லுக்குக் கூடப்பிறந்தது' என்பது பொருள். 'இரப்பானங் கொருவனவன் வேண்டுவகேட் டருள்செய்ளன, ஏசற் றேதான் புரப்பான்றன் அருள்நாடி இருப்பதுபோல் எங்கும்.நிறை பொருளே கேளாய்! மரப்பான்மை நெஞ்சினன்யான் வேண்டுவகேட் டிரங்கெனவே மெளனத் தோடந் தரப்பான்மை அருள்நிறைவில் இருப்பதுவோ? பராபரமே! சகச நிட்டை!” - ஆசையெனும் - 2 என்று அடிகள் கூறுவது காண்க. சும்மா இருத்தல்: இந்த நிலையில் இருப்பதே சும்மாவிருத் தல் என்று அடிகள் கருதும் நிலை. எனவே, இச்சொல் அடிக்கடி அடிகளின் திருவாக்கில் தலை காட்டுகின்றது. சும்மா இருப்பதற்கு ஒர் உபாயம் அருளுதல் கூடாதா? என்று வினவும் போக்கில், "எம்மால் அறிவதற எம்பெருமான் யாதும் இன்றிச் சும்மா இருக்கஒரு சூத்திரம்தான் இல்லையோ?” - இல்லையோவென் கண்ணி - 3 என்று கூறுவதைக் காணலாம். சும்மா இருக்கும் விருப்பம் அடிகளிடம் மிகுதியாக இருந்தது என்பதை, "சொல்லும் பொருளுமற்றுச் சும்மா இருப்பதற்கே அல்லும் பகலுமெனக்(கு) ஆசை பராபரமே!” - பராபரம் 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/223&oldid=892223" இலிருந்து மீள்விக்கப்பட்டது