பக்கம்:தாயுமானவர்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 208 ; தாயுமானவர் 'பற்றுவன அற்றிடு நிராசைஎன் றொருபூமி பற்றிப்பிடிக்கும் யோகப் பாங்கிற் பிராணலயம் என்னும்ஒரு பூமி,இவை பற்றின்மனம் அறும்என்னவே கற்றையஞ் சடைமெளனி தானே கனிந்தகனி கனிவிக்கவந் கனிபோல் கண்டதிந் நெறிஎனத் திருவுளக் கனிவினொடு கனிவாய்திறந்தும் ஒன்றைப் பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன்' - ககவாரி 6 என்ற பாடற்பகுதியில் இக்கருத்து அமைந்திருத்தல் கான லாம். ஞானமில்லாமல் முக்தி கூடுதல் முடியாதென்பது அடிக ளின் கருத்து. வேள்வி, தானம், பிற கருமங்கள், செபம், தீக்கை முதலிய எவையாயினும் அவையெல்லாம் ஞானத் தைத் தந்து, பிறகு அதன் மூலமே முக்தி கிட்டும் என்பது சித்தாந்த உண்மை. ஞானம் மும்மலங்களையும் அகற்றி உயிரைத் துய்மைப்படுத்தும். பின்னர் இயல்பாகவே துயவ னும் இன்ப வடிவினனுமாய இறைவனை அடைவிக்கும்; துன்பமற்ற - எல்லையில்லாத - அவனது பேரின்பத்தில் திளைத்திருக்கச் செய்யும். சரியிை, கிரியை, யோகம் என்பன ஞானத்தின் வளர்ச்சி நிலைகளே என்பதை, 'விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே!” - பராயரம் 157 என்ற அடிகளின் வாய்மொழியாலும் அறியலாம். ஆகவே, ஞானமின்றி முக்திக்கு வழி இல்லை என்பது தெளிவு. இதனை, 'பக்திநெறி நிலைநின்றும், நவகண்ட பூமிப் பரப்பைவல மாகவந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசிதாக மின்றியெழுநா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/228&oldid=892228" இலிருந்து மீள்விக்கப்பட்டது