பக்கம்:தாயுமானவர்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதமெனும் அத்துவிதம் & 209 & மத்தியிடை நின்றும் உதிர் சருகுபுனல் வாயுவினை வன்பசி தனக்கடைத்து மெளனத் திருந்தும்உயர் மலைதுழை தனில்புக்கும் மன்னுதச நாடிமுற்றும் சுத்திசெய் தும்மூலப் பிராணனே டங்கியைச் சோமவட் டத்தடைத்தும் சொல்லரிய அமுதுண்டும், அற்பவுடல் கற்பங்கள் தோறும்நிலை நிற்கவிறு சித்திசெய் தும்ஞான மலது.கதி கூடுமோ?” - சின்மையானந்த குரு 11 என்ற பாடலால் தெளிவுறுத்துகின்றார். பக்தி நெறி நிற்றல், திவ்விய தேசயாத்திரையை மேற்கொள்ளல் புண்ணிய தீர்த் தங்களில் நீராடல், பசியைப் பொருட்படுத்தாது, அதுவந்தவி டத்து உதிர்ந்த சருகு நீர் காற்று இவற்றை ஏற்று அதனைப் போக்குதல் சித்திகளை மேற்கொண்டு உடலைப் பல்லுழிக் காலம் நிலைபெறும்படிச் செய்தல் ஆகியவை ஞானம் பெறா தவிடத்து உயர்கதி அடைதல் கூடுமோ?’ என்று கூறுதல் காண்க. இங்கனம் மோனநிலை பெற்றவர்களே உயர்கதியை அடைவார்கள் என்பதை அடிகள் பிறிதொரு பாட்டில் கூறு வர். மத்தமத கரிமுகில் குலமென்ன நின்றிலகு வாயிலுடன் மதிஅகடுதோய் மாட கூடச்சிகர மொய்த்தசந் திரகாந்த மணிமேடை உச்சிமீது முத்தமிழ் முழக்கமுடன் முத்தநகை யார்களெடு முத்துமுத் தாய்க்குலாவி மோகத் திருந்தும்என்? யோகத்தின் நிலைநின்று மூச்சைப் பிடித்தடைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/229&oldid=892229" இலிருந்து மீள்விக்கப்பட்டது