பக்கம்:தாயுமானவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் இறப்பும் * 3 & கூர்மையாகக் கவனித்த மன்னர் பிள்ளையவர்களின் செயல் திறன், பக்தி, பண்பாடு முதலியவற்றைக் கண்டு, அவரது கணக்கு வல்லமையையும் அறிந்து தெளிந்து அவரைத் தமது அரசின் பெருங்கணக்கர் என்னும் உயர் பதவியில் இருத்தி னார். இப்பதவி அக்காலத்தில் பெரிய சம்பிரதி என்ற பெய ரால் வழங்கி வந்தது. இந்தப் பெரிய பொறுப்பின் காரணமா கக் கேடிலியப்பப் பிள்ளை திருமறைக்காட்டை விட்டு நீங்கி திருச்சிராப்பள்ளி சென்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்து வருங்கால் தமது தமைய னார் வேதாரண்யப் பிள்ளை மகப்பேறின்றி வருந்துவதைக் கண்ட கேடிலியப்பப் பிள்ளையவர்கள் தமது ஒரே மகன் சிவசிதம்பரத்தை அவருக்குத் தெத்தாகக் (சுவீகார புத்திரனா கக்) கொடுத்துவிட்டுத் தமக்கு ஒரு பிள்ளையை அருளும்படி 'சிராப்பள்ளிக் குன்றுடையானை தம் மனைவியரோடும் அன்போடு வணங்கி வேண்டி வந்தார். வேண்டுவார் வேண்டு வதையே ஈவானாகிய சிராப்பள்ளி மேயசெல்வனார் திருவரு எால் சில ஆண்டுகளில் அவர்கட்கு நல்லதொரு நாளில் நல்லோரையில் ஆண் மகவு ஒன்று பிறந்தது. இப்பிள்ளை பிறந்த இடம் மறைக்காடு என்று கொள்வாரும் உளர். பெற் றோர் அந்த அருமந்த பிள்ளைக்குத் திருச்சிராப்பள்ளிச் செல் வனாரின் திருப்பெயராகிய தாயுமானவன் என்ற திருநாமம் சூட்டி, சடங்குகள் பலவும் சிறப்புறச் செய்து அன்புடன் வளர்த்து வரலாயினர். இச்சிறுவனே நம் தாயுமான அடிகள். கல்வி: தாயுமானவரும் இளம்பிறை போல் இனிது வளர்ந்து வந்தார். பெற்றோர்கள் அவருக்கு உரிய காலத்தில் கல்வியைத் தொடங்கினர். 'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து' ஒன்ற வள்ளுவர்க் கருத்தின்படி முற்பிறப்பின் வாசனையால் தென்மொழி வடமொழி இரு மொழிகளிலும் உள்ள இலக் 1. குறள் - 398

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/23&oldid=892230" இலிருந்து மீள்விக்கப்பட்டது