பக்கம்:தாயுமானவர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 శ. தாயுமானவர் 哆 % கைத்தலம் நகப்படை விரித்தபுலி சிங்கமொடு கரடிதுழை நூழை கொண்ட கானம்மலை உச்சியிற் குகையூ டிருந்தும்என்? கரதலா மலகமென்னச் - சந்தமற மோனநிலை பெற்றவர்கள் உய்வர்காண் சனகாதி துணிவிதன்றோ?' - சச்சிதானந்த சிவம் 6 'மிக்கமதங்கொண்ட யானைகள் மேகக் கூட்டங்களபோல் விளங்குகின்ற வெளிமுற்றமும் திங்கள் மண்டிலத்தின் நடு வைத் தொடுவதுபோல் விண்ணை முட்டும் முடிகளையு டைய மாடங்களும் கூடங்களும் உடைய மாளிகையின் கண், சந்திரகாந்தக் கல்வினால் சமைத்த மணியிருக்கையின் உச்சியில் வீற்றிருந்து முத்தமிழ் முழக்கத்தோடு முத்தன்ன பற்களையுடைய மங்கைமார்களுடன் காதல் கொப்புளிக்க விளையாடி மோக நிலையிலிருந்தென்ன? பேயாக நிலை நின்று மூச்சினைப் பிடித்தடைத்துக் கொண்டும் கையகத்து நகமாகிய ஆயுதங்களை விரித்துக் கொண்டுலாவும் புலி சிங்கம் கரடி முதலிய கொடிய விலங்குகள் புகுந்துலாவும் உட்பகுதிகளுள்ள அடர்ந்த காட்டிலும் மலையுச்சியிலு முள்ள குகைக்குள் இருந்தாலும் என்ன பயன்? அங்கை நெல்லியென ஆரவாரமற்ற மோன நிலையைப் பெற்றவர் களே பிறவியின் நீங்கிப் பிழைத்தவராவர். இது சனகாதி முனிவர்களுடைய முடிவும் அன்றோ?' என்பது இப்பாட லின் விளக்கம். மெளனத்தின் பெருமையை வேறு ஒருவிதமாகவும் விளக்கலாம். குழந்தையொன்றுக்கு எம்மொழியைப் பேசத் தெரியாதிருப்பினும் எல்லா நாட்டவரும் அதனுடன் இணக் கம் கொள்ள விரும்புகின்றனர். பாரதியார் குழந்தையைப் 'பிள்ளைக்கனியமுது, பேசும் பொற்சித்திரம், ஆடிவருந்தேன் என்றெல்லாம் மதிப்பிடுகின்றார். 'சொல்லும் மழலையிலே - கண்ணம்மா! தன்பங்கள் தீர்த்திடுவாய்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/230&oldid=892231" இலிருந்து மீள்விக்கப்பட்டது