பக்கம்:தாயுமானவர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதமெனும் அத்துவிதம் & 211 & முல்லைச் சிரிப்பாலே - எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய்' " என்றும் எடைபோடுகின்றார். இங்ங்னமே ஞானி ஒருவர் மொழிகளையெல்லாம் கடந்த மெளனத்தில் வீற்றிருப்பதால் விண்ணவரும் மண்ணவரும் அவரைக் கொண்டாடத் தொடங்குகின்றனர். வலிவு படைத்ததே வாழ்வுக்குரியது. கானகத்துக்குரிய இந்த நியதி உண்மையில் எல்லா உலகிற்கும் உரியதாகின் றது. உடல் வலிவு மட்டிலும் வலிவு என்று கூறத்தக்கதல்ல. அறிவின் வலிவு அதைவிடச் சிறந்தது. இனி, தவமும் ஞான மும் உடையவர் வலியே ஒப்புயர்வற்றது. கானில் திரியும் விலங்குகளும் அந்த ஞானக்கருணைக் கடலுக்கு வசப்பட்டு விடுகின்றன. மக்கள், தேவர், யோகியர், ஞானியர் ஆகிய அனைவருமே அந்த அந்தத் தவராசருக்கு உரியவர் ஆகின்ற னர். எனவே, இறைவனுடைய படைப்பில் ஞானத்திற்கு நிகரான வாழ்க்கைத் திறன் வேறு எதனிடத்திலும் இல்லை என்பது தெளிவாகின்றது. இந்த ஞானநிலையைப் பெறுவ தற்கு மோனப் பொருளை இறைஞ்சுகின்றார் அடிகள். 'அது'என்றுன்னும் அதுவும் அறநின்ற முதிய ஞானிகள் மோனப் பொருளது, எதுஎன் றெண்ணி இறைஞ்சுவன் ஏழையேன்; மதியுள் நின்றின்ப வாரி வழங்குமே!’ - பொன்னைமாதரை - 29 என்ற பாடலில் இதனைக் காணலாம். ஞானநெறி; அஞ்ஞானம் இருள் போன்றது. ஞானம் ஒளி போன்றது. ஒளி வந்தாலன்றி இருள் நீங்கா தன்றோ? அது போல ஞானம் வந்தாலன்றி அஞ்ஞானம் நீங்காது. "ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம் நல்லஆ கமம் சொல்ல " 22. பாரதி - கண்ணம்மா என் குழந்தை - 8 23. சித்தியார் 8.22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/231&oldid=892232" இலிருந்து மீள்விக்கப்பட்டது