பக்கம்:தாயுமானவர்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్ట్ర 212 • தாயுமானவர் என்ற சித்தியார் கூறுகிறபடியும் ஞானமே முத்திக்கு நேரான வழியமைக்கும் என்பது அறிதற்பாலது. அறிவு யாவும் ஞான மேயாயினும் மெய்ப் பொருளாகிய இறைவனை அறியும் அறிவே ஞானம் என்பதை உளங்கொள்ளல் வேண்டும். மெய்யுணர்வு என்று அறநூல்களில் கூறப்படுவதும், சிவஞா னம், பதிஞானம் என்று சைவ நூல்கள் கூறுவதும் இதுவேயா கும். ஞானநெறி என்பது கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல் என்று நான்கு நிலையில் நடைபறும் பாங்கு டையது. இதனை அடிகள், 'கேட்டல்முதல் நான்காலே கேடிலா நாற்பதமும் வாட்டமற எமக்கு வாய்க்குநாள் எந்நாளோ!' - எந்நாட். நிலைப் பிரிந்தோர் 5 என்பதால் தெரிவிக்கின்றனர். ஞானம் முற்றிலும் கைவரப் பெறாவிடின் சரியை, கிரியை, யோகம் என்ற மூன்றிற்குரிய பதமுத்திரைகளுள் 24 ஒன்றாவது தமக்குக் கிடைக்கப் பெற வேண்டும் என்பது அடிகளாரின் விழைவு. இதனை அடிகள், "ஞானநெறி தானே நழுவிடினும் முப்பதத்துள் ஆனமுத்தி நல்குமென அன்புறுவ தெந்நாளே!” - எந்நாட். நிலைபிரிந்தோர் 2 என்பர். இவண் முப்பதம் எனக் குறிப்பிட்டது சாலோகம், சாமீபம், சாரூபம் என்ற மூன்று என்பது தெளியப்படும். ஆன்மா சீவபோதம் மறைந்து இறைவனுடன் இரண்ட றக் கலந்த பரிபூர்ண நிலையில் அடிகள் கூறும் அத்துவிதம் தெளிவாகப் புலனாகின்றது. 24. சைவ சமயக் கொள்கைப்படி சித்தாத்த முத்தி அல்லது பதிமுத்தியே வீடு பேறு என்பது. இதுவ்ே முடிந்த முத்தியாகும். காயுச்சியம் என்பதும், இதுவேயாகும். ஏனைய மூன்றும் சலோகம், சாமீபம், சாரூபம் என்பன. இவை பற்றிய விவரங்களை இவ்வாசிரியர் எழுதியுள்ள சைவ சித்தாந்தம் - ஓர் அறிமுகம் (கழக வெளியீடு) என்ற நூலில் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/232&oldid=892233" இலிருந்து மீள்விக்கப்பட்டது