பக்கம்:தாயுமானவர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్య డీ శః தாயுமானவர் கியம், இலக்கணம், தருக்கம் முதலாய நூல்களைப் பழுதற ஒதிக் கற்றுத் துறைபோய வித்தகரானார். தமக்கு முன்னே சிறப்புற்றுத் திகழ்ந்த சான்றோர்களாகிய தேவார முதலிகள், மாணிக்கவாசகர், அருணகிரியார் போன்ற சமயச் சான்றோர்களின் நூல்களையெல் லாம் நுகர்ந்து அவர்தம் பாடல்களில் திளைத்துத் திகழ்ந்தார். கற்றபின் நிற்க அதற்குத் தக' என்பது வள்ளுவர் வாக்கு. கற்றதன் பயனை, 'கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்' என்று உணர்த்திய பெருந்தகை இப்பெருமான். இவற்றை நன்குனர்ந்த தாயுமானவரின் கல்வி வெறும் உலக வாழ்வின் அளவிலே மட்டும் நின்று விடவில்லை. இந்த உலக வாழ் வின் உச்சியில் திகழும் உண்மை நாட்டம், மெய்யுணர்வின் நாட்டம், அவரை ஈர்த்தன. வாலறிவன் நற்றாள் தொழுது வாழ்க்கையின் பயனை அடைய அவர் மனம் அவாவி நின்றது. 'கற்றும் என்பலன்? கற்றிடும் நூல்முறை சொற்ற சொற்கள் சுகாரம்ப மோநெறி நிற்றல் வேண்டும்; நிருவிகற் பச்சுகம் பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே 4. ور என்ற பாடல் அவர்தம் ஆவலையும் ஆர்வத்தையும் புலப்ப டுத்தி நிற்கின்றது. இவர் கற்ற கல்வியெல்லாம் 'ஆன்ம இலாபத்தை அடைதல் எவ்வாறு?' என்று அதனையே விரும் பும் பெருவேட்கை எழுவதற்கே உதவுவனவாயின. 'சந்ததமும் நின்கருனை சாற்றுவதல் லால்வேறு சிந்தை யறியேனுன் சித்தம் பராபரமே” மண்ணொடு விண்காட்டி மறைந்துமறை யாவருளைக் கண்ணொடுகண் ணாகஎன்று காண்பேன்? பராபரமே' 2. மேலது - 391 3. மேலது - 2 4. பொன்னை மாதரை-36 5. பராபரம்-255 6. மேலது.-82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/24&oldid=892241" இலிருந்து மீள்விக்கப்பட்டது