பக்கம்:தாயுமானவர்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 222 శ தாயுமானவர் 'தெசவிதமது ஆய்நின்ற நாதங்கள் ஒலி' - சித்த.கன.6 என்ற தொடரால் அடிகளும் குறிப்பிடுவர். யோகிகளுக்குத் திங்கள் மண்டலம் விரிந்து அமுதம் பொழிதலின் அதனை அரசர்களது கொற்ற வெண் குடைக்கு அடிகள் உவமையாக்கி மகிழ்வர். "பூரண மதிக்குடை திகழ்ந்திட' - மேலது 6 என்பது காண்க. அட்டாங்க யோகம்: இதனைப் பசஞ்சலி முனிவர் தமது யோக சூத்திரத்தில் விரிவாக விளக்குவர். அவற்றின் பகுதி களை ஈண்டுக் காட்டிச் சிறிது விளக்குவோம். அவை இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாகும். இயமம் என்பது கொல்லாமை, களவின்மை, பொறியடிக் கம், உண்மை, பொறுமை, நடுவுநிலைமை, தயை, துய்மை, கள்ளுண்ணாமை, துய உணவை அளவாகக் கோடல் என் { { ☾Ꭲ . நியமம் ஆவது, தவம், செபம், மனநிறைவு, கடவுள் நம்பிக்கை, ஈகை, மெய்ந்நூற்கேள்வி, விரதம் நன்மையில் விருப்பம், பாவத்தில் வெறுப்பு என்பன. ஆசனம் என்பது முக்கியமாக எட்டு இருக்கைகளைக் குறிக்கும். அவற்றுள் சிறப்பாக நுவலப் பெறுவது பதுமாச னம், அஃதாவது இரு தொடை மேலும் இரண்டு உள்ளங்கால் களையும் மாறித் தோன்ற வைத்தல். இடத் தொடையில் வலக்கால் பரட்டையும் வலத் தொடையில் இடக்கால் பரட் டையும் வைத்திருத்தல் எனலாம். ஆசன வகைகளை யோக நூல்களில் கண்டு தெளியலாம். சுகாசனம் என்பது உடம்பின் வசதிக்குத் தகுந்தபடி இருந்து கொள்ளுதல். அஃது எல்லார்க் கும் இயல்வதே. தாயு-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/242&oldid=892244" இலிருந்து மீள்விக்கப்பட்டது