பக்கம்:தாயுமானவர்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ஆசாரியனின் அருமை சிசிேவ சமயத்தில் குருலிங்க சங்கம் வழிபாடு சிறந்தது, உயிராயது. குரு - ஆசாரியர்; இலிங்கம் - திருக்கோயிலில் இருக்கும் திருமேனிகள்; சங்கமம் சிவனடியார்கள். இந்த மூன்றையும் அடிகள், 'மூர்த்தினல்லாம் வாழி:எங்கள் மோனகுரு வாழி:அருள் வார்த்தைஎன்றும் வாழிஅன்பர் வாழி பராபரமே” - பராயரம் 229 என்ற கண்ணியில் வழுத்துகின்றார். 'குருலிங்க சங்கமமாக் கொண்ட திருமேனி, கருவொன்று மேனிநம்பாற் காட்டாது; - அருள் என்று கண்டவர்க்கே ஆனந்தம் கண்டகொள லாம்;அலது கொண்டவர்க்கிங் கென்ன கிடைக் கும்?” - உடல்பொய்யுறவு 23 என்ற பிறிதொரு பாடலில் இவ்வழிபாட்டின் பெருமை உணர்த்தப்பெறுகின்றது. இலிங்கம்பற்றிய பெருமையை அடிகளின் கருத்தில் 'இறைவன் என்ற தலைப்பிலும், சங்க மத்தின் பெருமையை அடியார்களின் பெருமை என்ற தலைப்பி லும் விளக்கப் பெற்றுள்ளன. குருவின் பெருமையை மெளன குரு வணக்கம், சின்மையானந்த குரு என்ற பதிகங்களிலும் வேறு பல பாடல்களிலும் விளக்கியுள்ளதை ஈண்டுக் காண் டோம். தாயுமான அடிகட்குத் தென்முகக் கடவுளே - தட்சிணா மூர்த்தியே - முதற்குரு. இதனை, 'அந்தணர் தால்வர் கான அருட்குரு வாகி வந்த எந்தையே! எல்லாம் தானென் றியம்பினன் எமைப்பு டைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/249&oldid=892251" இலிருந்து மீள்விக்கப்பட்டது