பக்கம்:தாயுமானவர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* جمي 230 & $ 新 தந்தைநீ எம்மைக் காக்கும் தலைவனே துந்தை யன்றோ?” - தேன் முகம் 16 என்ற பாடலால் அறிகின்றோம். இந்தக் கடவுள் எங்கிருக்கின் றார்? அண்டங்கள் அனைத்துமே அவர் வீற்றிருக்கும் இட மாக அமைகின்றது. உலக வாழ்க்கையில் அரசர்கள் மேலான இடமான சிம்மாதனத்தில் வீற்றிருப்பதை நாம் அறிவோம். ஆனால், வீற்றிருப்பதற்குரிய ஆசனங்களில் பிரபஞ்சத்திற்கு நிகரானது வேறொன்றுமில்லை. எண்ணிறந்த சந்திர சூரியர் கள் விண்மீன்கள் இழைக்கப் பெற்றுள்ள இயற்கையென்னும் சிம்மாதனம் அது. பிரகாசம் பொருந்திய இக்கோளங்களுள் பன்னிறங்கள் அமையப் பெற்றுள்ளவைகள் உள்ளன. நம் கண்ணுக்குத் தென்படுபவைகள் வெண்ணிறங்களுடன் ஒளிர் கின்றன. வெளிப்புற அண்டங்களில் பச்சை சிவப்பு, மஞ் சள், நீலம், ஊதா போன்ற விதவிதமான நிறங்களுடைய கோளங்கள் உள்ளன. இவற்றைக் குருமணி என்று இயம்பு கின்றனர் அடிகள். வெவ்வேறு நிறமுடைய இரத்தினங்கள் என்பது அதன் பொருள். இத்தகைய குருமணி இழைத்திட்ட சிம்மானத்தில் வீற்றிருக்கின்றார் தட்சிணாமூர்த்தி; தாயுமானவ ரின் பரம குருநாதர். குருமணி இழைத்திட்ட சிங்காசனத்தின் மிசை கொலுவீற்றிருக்கும் நின்னை' என்று இந்நிலையைக் குறிப்பிடுகின்றார் அடிகள், ஈண்டு அடிகள் தட்சிணாமூர்த்திக்கும் தம்மை ஆட் கொண்ட மெளனகுருவிற்கும் ஒருவித வேற்றுமையும் காணாத பாங்கில் பகர்கின்றார். ஆன்மசாதகர்கள் ஒவ்வொரு வருக்கும் இத்தகைய கருத்து முற்றிலும் மிகமிக அவசியமா கின்றது. தன்னை ஆட்கொள்ளும் குருநாதரை சாதாரண மானிடனாக கல்லூரி பள்ளிகளில் பணியாற்றும் பேராசிரி யர் ஆசிரியர்களைப்போல் - காண்பவருக்கு ஆன்மசாதனத் தில் ஒருவித முன்னேற்றத்தையும் பார்க்க முடியாது. குருவை பரம்பொருள் சொரூபமாகவே கருதி வழிபடுகின்றவர்கட்கு 1. மெளனகுரு வணக்கம் - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/250&oldid=892253" இலிருந்து மீள்விக்கப்பட்டது