பக்கம்:தாயுமானவர்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مم يمي 哆,232 令 3. தாயுமானவர் ‘என் மனக்குறையெல்லாம் தீரும் வண்ணம் வணங்க வேண்டும் என்கின்றார், ஆன்மசாதகனுக்கு இருக்கின்ற மனக் குறைதான் என்ன? உலகத்தவர்கட்குப் பலதரப்பட்ட மனக் குறைகள் உள்ளன. பொருள் இல்லையென்றும், போகம் இல்லையென்றும், பதவி இல்லையென்றும், பேர்புகழ் இல் லையென்றும் இப்படி எத்தனையோ குறைகள்; நன்னெறி யில் செல்லுகின்ற சாதகன் ஒருவனுக்கு இத்தகைய குறைகள் ஒன்றும் இல்லை. இவற்றை அவன் கனவிலும் கருதுவதில் லைதான். இறைவனுடைய அருளுக்குப் பாத்திரமாக வில் லையே என்கின்ற மனக்குறை ஒன்றுதான் ஆன்ம சாதகனை அல்லும் பகலும் வாட்டுகின்ற குறை. அடிகளிடம் இக்குறை இருந்து கொண்டிருந்தது இயல்பே யாகும். குருவின் இணையடிகளை அன்றலர்ந்த நறுமணம் மிக்க மலர்களால் அருச்சிக்க விழைகின்றார். மணம் நிறைந்த பூ 'மருமலர்' எனப்படுகின்றது. பூவினிடத்து மனமும் அழகும் தூய்மையும் நிறைந்துள்ளன. மனம் எத்தகைய பரிபாகம் அடைய வேண்டும் என்பதற்கு மலர் சிறந்ததோர் எடுத்துக் காட்டு, மண்ணைப் பயன் படுத்தி செடி வளர்ந்து மலராகப் பரிணமிக்கின்றது. மண்ணுலக வாழ்வைப் பயன்படுத்தி மனத்தை மலருக்கு நிகராகத் திருத்தியமைப்பது ஆன்மசாதக ரின் குறிக்கோள். மருமலர் தூவி தெய்வத்தை வணங்குவது போன்று தூய்மையான மனத்தால் தெய்வத்தையும் - தெய் வத்தையொத்த குருநாதரையும் வணங்குகின்றவனே இறை வனை அடையத் தகுதியுடையவனாகின்றான். தாயுமானவர் இத்தகுதி படைத்தவர் என்பதை நாம் அறிகின்றோம். குருலிங்க சங்கமம்: சைவ சமயத்தில் இந்த வழிபாடு சிறந்தது. இந்த மூன்றையும் அடிகள், 'மூர்த்தினல்லாம் வாழி:எங்கள் மோனகுரு வாழி:அருள் வார்த்தைஎன்றும் வாழிஅன்பர் வாழி பராபரமே” - - பராயரம் 229

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/252&oldid=892255" இலிருந்து மீள்விக்கப்பட்டது