பக்கம்:தாயுமானவர்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசாரியனின் அருமை & 235 & மெளனகுரு எட்டாம் பாடலிலும் தம் குருநாதரின் பெரு மைகளைப் பேசுகின்றார் அடிகள். 'உடலைப் பேண வைத் திருப்பதற்குக் காரணம் பரமனை வழுத்துதற் பொருட்டேயா கும். சருகுகளையும் நீரையுமே உணவாகக் கொண்டு தவமி யற்றுவார் கோடிக்கணக்கான கூட்டத்தினர் உளர். நிலவொ ளியை உணவாகக் கொண்டு வாழும் சகோரபட்சிகள்" போல, மதிமண்டல அமுதினால் அழியாத்தன்மையடைந்த பல கோடி யோகியர்களும் உள்ளனர். இருவினையொப்புற்றுக் 6. சகோரபட்சிகள்: இவை நிலஒளியினின்றும் தமது வாழ்க்கைக்கு ஏதுவான பிராணனைப் பெறுகின்றன. அமாவாசையன்றும் அதற்கு இரண்டு நிட்கள் முன்னரும் பின்னரும் நிலவொளியைப் பூமி பெறாததால், மற்ற இருபத்தைந்து நாட்களில் சந்திர காந்தியினின்றே அவை உயிர் வாழ்க்கைக்கு ஏதுவான ஆற்றலைப் பெறுகின்றன. முழு மதியத்தன்று அவைகட்குப் பெருவிருந்து இயற்கையால் வழங்கப் பெறுகின்றது. (இவற்றைச் செம்போத்துகள் என்பர்) 7. இப்பறவைகட்கு ஒப்பானவர்கள் யோகியர்கள். இவர்களின் தொகை பலகோடி இவர்கள் உலகில் கிடைக்கும் உணவை அதிகமாகப் பொருட்படுத்துவ தில்லை. மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை இந்த யோகியர் தங்கள் தலையுச்சியிலுள்ள சஹஸ்ராரத்தைச் சென்று தாக்கும்படி ஏவுவர். அப்படிச் செய்வதால் கபாலத்தில் இருக்கும் ஏழாவது ஞானபூமியினின்று அமிர்த தாரை சொட்டுகின்றது. அதை அமிர்தம் என்றே சொல்ல வேண்டும். தைல தாரை போன்று நாவுக்கு அது வந்து எட்டுவதால், அஃது அமிர்த் தாரை என்று சொல்லப்படுகின்றது. பசியையும் தாகத்தையும் அகற்றிவிட்டுப் பரமானந் தத்தை அஃது உண்டு பண்ணுகின்றது. புறத்திலிருந்து உணவைப் புசித்துப் பசியைப் போக்கிப் பரம திருப்தி அடைவதைவிட இது மேலானது. புறத்திலி ருந்து ஏற்கப்படும் உணவு வகைகளுள் சில உடலுக்குப் பொருந்தியவகைளாக இருக்கலாம்; சில் பொருந்தாத வகைகளாகவும் போய்விடலாம். பொருந்தாத உணவு துன்பத்தை விளைவிக்கின்றது. ஆனால், உள்ளிருந்து வடியும் அமிர்த தாரையோ உடலையும் உயிரையும் நன்கு பேணுகின்றது. இங்கு செரிமானம் செய்தல் என்பதற்கு இடமே இல்லை. இதனால் உடல் யாண்டும் ஓய்வு பெற்றுள்ளது. உறக்கத்துக்கும் அவசியம் இல்லாத ஓர் உயர்ந்த நிலையைப் பெறுகின்றது உடல். இதனால் உடல் வாழ்வு நிலைத்திருக்கின்றது. அமிர்த பானம் செய்ததாகக் கருதப் பெருகின்றது. இதனால் யோகியர்கள் பரம்பொ ருளை ஓயாது தியானம் செய்கின்றனர். 8. இருவினையொப்பு - ஒருவன்தான் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தி லும் தீவினைப் பயனாகிய துன்பத்திலும் உள்ளம் வேறுபடாத நிலை. அஃதாவது இன்பத்தில் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது இரண் டையும், சமமாக நுகரும் நிலை. அடிகள் ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டார்கள் (பராபரம் - 1.5) என்று குறிப்பிடுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/255&oldid=892258" இலிருந்து மீள்விக்கப்பட்டது